யாரு போட்ட கோடு

லெனின் வடமலை இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் 'யாரு போட்ட கோடு'. பிரபாகரன், மேஹாலி மீனாட்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
யாரு போட்ட கோடு
Updated on
1 min read

லெனின் வடமலை இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் 'யாரு போட்ட கோடு'. பிரபாகரன், மேஹாலி மீனாட்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறு பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு எழுந்துள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியரான நாயகன் பிரபாகரன், மாணவர்களுக்கு படிப்பை மட்டும் சொல்லிக் கொடுக்காமல், சமூகப் பணி மற்றும் அரசியல் பற்றியும் கற்றுக் கொடுத்து, அநீதிகளுக்கு எதிராகப் போராடும் எண்ணத்தையும் விதைக்கிறார். அதன்படி, ஊரில் உள்ள மதுக்கடையை அகற்றக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்த, அரசு சம்பந்தப்பட்ட மதுபானக் கடையை அந்த இடத்தில் இருந்து அகற்றுகிறது.

இதனால், பார் நடத்தும் வில்லன் லெனின் வடமலைக்குப் பொருளாதார இழப்பு ஏற்படுவதால், ஆசிரியர் பிரபாகரன் மீது கோபம் கொள்கிறார். இப்படித் தொடர்ந்து பிரபாகரனின் அதிரடி நடவடிக்கையால், லெனின் வடமலை பாதிக்கப்படுகிறார். இதனால் பிரபாகரனை பழிவாங்குவதற்குச் சரியான நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், பள்ளியில் புதிதாக வேலைக்குச் சேரும் ஆசிரியை மேஹாலி மீனாட்சியும், பிரபாகரனும் காதலிக்கிறார்கள். அதே சமயம், மேஹாலி மீனாட்சி ஏற்கெனவே திருமணமானவராக இருக்கிறார்.

'திருமணமான மேஹாலி மீனாட்சி பிரபாகரனைக் காதலிப்பது ஏன்?', 'வில்லன் லெனின் வடமலை திட்டத்தின்படி நாயகன் பிரபாகரன் பள்ளியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டாரா?' ஆகிய கேள்விகளுக்கான விடைகளுடன், நாட்டில் தற்போதைய காலகட்டத்தில், அறிவியலும், தொழில்நுட்பமும் மிகப்பெரிய வளர்ச்சியடைந்தாலும், இன்னமும் சாதி பாகுபாடு மற்றும் மூடநம்பிக்கையில் மூழ்கியிருக்கும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது இந்தப் படம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com