டியர் ரதி

டியர் ரதி

இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் மற்றும் லாக்லைன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் 'டியர் ரதி'.
Published on

இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் மற்றும் லாக்லைன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் 'டியர் ரதி'. சரவண விக்ரம், ஹஸ்லி அமான், ராஜேஷ் பாலச்சந்திரன், சாய் தினேஷ் பத்ராம், யுவராஜ் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பிரவீன் கே .மணி இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

படம் குறித்து இயக்குநர் பேசும்போது, 'இன்றைய சூழலில் ஆணோ பெண்ணோ தனக்கு விருப்பமான ஒரே அலை வரிசை மனம் கொண்ட எதிர்பாலின நட்பைத் தேடினால், அடைவது சுலபம்.

அந்த நட்பு காதலாவது கடினம். அதைத் தக்க வைத்துக் கொள்வது சுலபமல்ல, மிகக்கடினம். அப்படிப் பிறரிடம் பேசத் தயங்கும், குறிப்பாகப் பெண்களிடம் பேசத் தயங்கும் ஓர் வாலிபனை ஒரு பெண் காதலிக்கிறாள். அதே நாளில் அந்தப் பெண்ணைத் தேடி போலீஸ் ஒரு பக்கம், ரவுடிக் கும்பல் ஒரு பக்கம் எனத் துரத்துகிறார்கள். வெளியே சென்றவர்கள் பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார்கள்.

அது என்ன மாதிரியான பிரச்னை ?அதை எப்படி எதிர்கொண்டார்கள்? என்பதுதான் படத்தின் கதை.

இன்றைய தலைமுறையினர் காதல் இணையைத் தக்க வைத்துக் கொள்ள எப்படி எல்லாம் போராடுகிறார்கள்? அவர்கள் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகள், சிக்கல்கள் என்ன?அதைச் சரி செய்ய என்ன செய்யவேண்டும்? என்பதைச் சொல்லும் வகையில் ரொமான்டிக் காமெடி பாணி திரைக்கதையில் சொல்லியிருக்கிறேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com