மொய் விருந்து

எஸ்.கே. ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கமலகண்ணன் தயாரித்து வரும் படம் 'மொய் விருந்து'.
மொய் விருந்து
Updated on
1 min read

எஸ்.கே. ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கமலகண்ணன் தயாரித்து வரும் படம் 'மொய் விருந்து'. பாலுமகேந்திராவின் 'வீடு' புகழ் அர்ச்சனா, ரக்ஷன், ஆயிஷா, அபர்ணதி, தீபா சங்கர், சுஜாதா, மானஸ்வி, கொட்டாச்சி, அருள்தாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார் மணிகண்டன்.

படம் குறித்து இயக்குநர் பேசும்போது, 'நான் பேராவூரணி எனும் ஊருக்குச் சென்றபோது, 'மொய்விருந்து' நடப்பதைப் பார்த்தேன். கோடிக்கணக்கில் மொய் வரும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

ஒரு குடும்பம் மூன்று வருடத்துக்கு ஒரு முறைதான் மொய் விருந்து நடத்த முடியும். ஏனென்றால், அந்த 3 வருடத்தில் அவர்கள் வாங்கிய மொய்ப்பணத்தைத் திருப்பிச் செய்யவேண்டும். அப்படிச் சரியாக செய்பவர்களுக்கே அதிக மொய் வரும். இந்தப் பழக்கம் மூலம் ஊரே ஒழுக்கமாக இருக்கும். அனைவருக்கும் உதவி கிடைக்கும். இது எனக்கு பெரிய ஆச்சரியம் தந்தது.

இதன் மூலம் வசூலாகும் தொகையைக் கொண்டு ஒவ்வொரு குடும்பமும் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டும். இதை மையமாக வைத்து உருவாக்கியது தான் இந்தப் படம். இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் கொடைக்கானலின் பண்ணைக்காடு பகுதியில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்

படத்துக்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரபூர்வமாக வெளியாகும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com