ஈழத்து மெல்லிசை மன்னர்

'ஈழத்து மெல்லிசை மன்னர்' என அழைக்கப்படுபவர் எம்.பி.பரமேஷ்.
ஈழத்து மெல்லிசை மன்னர்
Updated on
1 min read

'ஈழத்து மெல்லிசை மன்னர்' என அழைக்கப்படுபவர் எம்.பி.பரமேஷ். 1980-களில் இலங்கை வானொலியில் இவரது இசையமைப்பில் உருவான பல பாடல்கள் பிரபலம். இவர் தற்போது தனது தந்தை தமிழறிஞர் பீதாம்பரம் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்.

அதற்காகவும், அவரது 60 வருட இசைப் பயணத்துக்காகவும் சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதை அவரது மகளும், இலங்கையின் முதல் தமிழ்ப்பெண் இசை அமைப்பாளருமான பிரபாலினி பிரபாகரன் நடத்தினார். விழாவில் திருச்சி சிவா எம்.பி., இயக்குநர் சீனு ராமசாமி கலந்துகொண்டனர்.

அப்போது திருச்சி சிவா, 'கொடிமலர்' என்ற படத்துக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பி.பி.

ஸ்ரீனிவாஸ் பாடிய 'மவுனமே பார்வையால்' என்ற பாடலைப் பாடி அசத்தினார். பிறகு அவர் பேசியதாவது, '60 வருட காலம் கலையுலகில், அதுவும் இசைத்துறையில் நிலைத்து நிற்பது என்பது சாதாரணமான காரியம் அல்ல; அது ஒரு தவம். தமிழர்களான நாம் கலை என்று வந்துவிட்டால், மொழி பார்ப்பது இல்லை. லதா மங்கேஷ்கர் உள்பட ஹிந்தி கலைஞர்களை அங்கீகரிக்கிறோம், பாராட்டுகிறோம். ஆனால், நமது பி.சுசீலா என்ற அற்புதமான பாடகியை அவர்கள் ஏற்பது இல்லை.

ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி. பரமேஷ் அவர்களின் இசைப் பயணம் ஒரு மண்ணின் இசை வரலாறு. பொதுவாக ஒரு கலைஞன் தன் வாழ்

நாளில் ஒரு பத்தாண்டுகள் புகழுடன் இருப்பதே பெரிய விஷயம். ஆனால், தொடர்ந்து அறுபது ஆண்டுகள் இசையோடு பயணிப்பது என்பது சாதாரணமானதல்ல. இன்றைய நவீன காலத்தில் இசை எவ்வளவு மாறினாலும், மெல்லிசையையும் ராகங்களையும் அடிப்படையாகக் கொண்ட இசை எப்போதும் அழிவதில்லை. அந்த இசையைக் கட்டிக்காக்கும் ஒரு தூணாக பரமேஷ் விளங்குகிறார்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com