வெங்கட் கே நாராயணா சார்பில் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் சாய் ஃபென்-இன் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து மலையாள திரையுலகின் இரண்டு இளம் இயக்குநர்கள் இணையும் புதிய படத்தை உருவாக்க இருக்கின்றன.
இந்தப் படத்தை "மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தின் இயக்குநர் சிதம்பரம் இயக்க, "ஆவேஷம்' படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் எழுதுகிறார்.
ஷைஜூ காலெத் ஒளிப்பதிவு செய்கிறார். சுஷின் ஷியாம் இசையமைக்கிறார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பை கவனிக்கிறார். படம் குறித்து கே.வி.என். புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா பேசும் போது, "எங்கள் குறிக்கோள் எப்போதும், பல மொழிகளில் திரைப்பட அனுபவத்தை புதுப்பிப்பதாகவே இருந்துள்ளது.
அந்த வகையில் இந்தப் படம் மூலம் நாங்கள் மலையாள திரையுலகில் களமிறங்குகிறோம். ரசிகர்கள் எங்களிடம் எதிர்பார்க்கும் பிரமாண்டம் மற்றும் சிறப்பான கதையம்சம் இந்தப் படத்தில் இருக்கும்.
மிகவும் தலைசிறந்த குழுவுடன் இணைவதால், அந்த விஷயத்தில் நாங்கள் அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறோம்' என்று தெரிவித்தார். இயக்குநர் சிதம்பரம் பேசும் போது, "கதைகளை சொல்லும் என் ஆசையை பகிர்ந்து கொள்ளும் குழுவுடன் பணியாற்ற இருப்பது மிகுந்த ஆர்வத்தை தூண்டுகிறது.
இந்தக் கூட்டணியை நான் அதிகம் எதிர்பார்க்கிறேன், இந்தக் குறிக்கோளை நிஜமாக்கும் தருணத்திற்காக காத்திருக்க முடியவில்லை' என்று கூறினார்.
எழுத்தாளர் ஜித்து மாதவன் கூறும் போது, "இந்தக் கதை என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. தலைசிறந்த குழுவுடன் இணைந்து, சிறப்பான ஒன்றை உருவாக்குவோம் என்பதில் நான் அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறேன்' என்றார்.
கே.வி.என். நிறுவனம் கன்னட மொழியில் யாஷ் நடிக்கும் டாக்சிக், தமிழில் விஜய்யின் ஜனநாயகன், ஹிந்தியில் பிரியதர்ஷன் இயக்கும் படங்களுடன் தற்போது மலையாள துறையிலும் கால்பதிக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.