மிருகம்... ஏன்? எதற்கு? எப்படி?

வீடுகளில் பிராணிகளையும், பறவைகளையும் வளர்ப்பது வழக்கம். நாய்கள், பூனைகள், குதிரைகள் என்று விலங்குகளையும், புறாக்கள், கிளிகள்..
மிருகம்... ஏன்? எதற்கு? எப்படி?
Published on
Updated on
1 min read

வீடுகளில் பிராணிகளையும், பறவைகளையும் வளர்ப்பது வழக்கம். நாய்கள், பூனைகள், குதிரைகள் என்று விலங்குகளையும், புறாக்கள், கிளிகள்.. என்று பறவைகளையும் வளர்ப்போர் உண்டு.

ஆனால், நம் நாட்டில் வீடுகளில் வளர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ள ஏழு விலங்குகள் உள்ளன. இவற்றை வனப் பகுதிகளிலும், விலங்குகள் சரணாலயத்திலும் மட்டுமே காண முடியும். வீடுகளில் வளர்க்கத் தடை ஏன் தெரியுமா?

புலிகள்:

வலிமையான தசைகள்,பெரிய உருவம், வலுவான பற்கள்,பெரிய தலை, நகங்கள், அடங்காமை ஆகியவையே இதனை வீட்டில் வளர்க்கத் தடை விதிக்க முக்கிய காரணமாகும்.

அமெரிக்காவில் பெரிய பண்ணைகளைக் காக்க, இன்றும் 5 ஆயிரம் புலிகள் வீட்டு விலங்குகளாகப் பராமரிக்கப்படுகின்றன.

சிங்கங்கள்:

புலிகள் போலவே இதுவும் பிரம்மாண்ட வடிவம். மிருகக் காட்சி சாலைகள், சர்க்கஸ்களில் மட்டுமே பராமரிக்க அனுமதி உண்டு.

யானைகள்:

பிரம்மாண்ட வடிவம். கேரளம் உள்பட சில மாநிலங்களில் வாடகைக்கு விடுவதற்காகவே சிலர் முன் அனுமதியைப் பெற்று யானைகளை வளர்க்கின்றனர். நடிகர் ஜெயராமும் யானை வளர்க்கிறார். இதனை பராமரிக்க நல்ல வசதியும் பெரிய தோட்டமும் தேவை.

குரங்குகள்:

மனிதனுடன் இருப்பது போல் தோன்றினாலும், முரட்டு விலங்குகளில் ஒன்று. எந்த நேரமும் தன் முரட்டுத்தனத்தை வெளிப்படுத்தும் என தீர்மானிக்க இயலாத நிலையில் இதனை வீட்டில் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரடிகள்:

உருவத்தில் பெரியது. முரட்டுத்தனமானது.எந்த நேரத்திலும் ஆபத்து என உணர்ந்து இதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹைனா:

காட்டு மிருகம். முரட்டுத் தனம் மிக்கது. உருவத்தில் பெரியது.

காட்டு எருமைகள்:

பிரம்மாண்ட உருவம். அதனைவிட முரட்டுத்னமான நடத்தை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com