அரசியல், ஆன்மிகம், சினிமா

அரசியல் மேடைகளில், ஆன்மிக உரைகளில், பட்டிமன்றங்களில், தொலைக்காட்சி விவாதங்களில், இலக்கிய உரைகளில் என்று எல்லாவற்றிலும் முகம் காட்டுபவர் மை.பா. நாராயணன்.
அரசியல், ஆன்மிகம், சினிமா
Published on
Updated on
1 min read

அரசியல் மேடைகளில், ஆன்மிக உரைகளில், பட்டிமன்றங்களில், தொலைக்காட்சி விவாதங்களில், இலக்கிய உரைகளில் என்று எல்லாவற்றிலும் முகம் காட்டுபவர் மை.பா. நாராயணன். கூடுதலாக அண்மைக்காலமாக திரையுலகிலும் முகம் காட்டி வருகிறார்.

அண்மையில் வெளிவந்த 'வணங்கான்' படத்தில் வழக்குரைஞராக கவனிக்கத்தக்க அளவில் நடித்திருத்திருந்தார். இதற்கு முன்பு 'நாச்சியார்', 'ஜோக்கர்' உள்ளிட்ட 13 படங்களில் நடித்துள்ளார். பத்திரிகையாளராக அவருக்கு 30 ஆண்டு கால அனுபவம் உண்டு. தனது திரையுலக அனுபவம் குறித்துப் பேசும் போது...

'எனது திரை உலகப் பிரவேசத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் ராஜுமுருகன் தான். அவரது 'ஜோக்கர்' படம் தான் எனக்கு முதல் படம். பிறகு 'தீரன் அதிகாரம் ஒன்று', 'நாச்சியார்', 'நேர்கொண்ட பார்வை', 'கலகத் தலைவன்' உள்ளிட்ட படங்களில் நடிப்பு பயணம் தொடர்ந்தது. பாலா இயக்கத்தில் 'வணங்கான்' வந்துள்ளது. அவர் இயக்கத்தில் நடிப்பது என்பது படித்து ஒரு சான்றிதழ் பெற்ற அனுபவத்தைக் கொடுப்பது.

ஒரு சிறு பாத்திரமாக இருந்தாலும் அதை உயிர்ப்புள்ள குணச்சித்திரமாக மாற்றுவதில் அவர் காட்டும் ஈடுபாடு வியக்க வைக்கும். பல அரசியல் கட்சித் தலைவர்களிடமும் பிரமுகர்களிடமும் எனக்கு நட்பான தொடர்பு உண்டு .அவர்கள் அனைவரது அன்புக்கும் பாத்திரமானவனாக நான் இருக்கிறேன். அதுவே எனது வாழ்க்கைப் பாதையில் வளர்ச்சியை நோக்கிப் பயணம் செய்ய உதவுகிறது.

நான் நடித்த படங்களில் சிறு வேடமாக இருந்தாலும் பார்வையாளர் மனதில் பளிச்செனப் பதியும் வேடங்களில் நடித்து வந்துள்ளேன். 'அறம்' கோபியின் புதிய படத்திலும், வ.கெüதமனின் காடுவெட்டி குரு கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் புதிய படத்திலும் நடித்து வருகிறேன்' என்றார் மை.பா.நாராயணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com