பிரமிட் என்றாலே எகிப்து நினைவுக்கு வரும். அங்குதான் அதிக அளவிலான பிரமிடுகள் இருக்கும் என்பர்.
எகிப்தில் 138 பிரமிடுகள் உள்ளன. இருப்பினும், எகிப்தைவிட மொராக்கோ நாட்டில்தான் அதிக பிரமிடுகள் உள்ளன. ஆனால் அவை அளவுகளில் சிறியவை.
சூடானில் 250 பிரமிடுகள் உள்ளன. "மெரோநெக்ரோபா' என்ற இடத்துக்கு அருகில் மட்டும் இருநூறுக்கும் அதிகமான பிரமிடுகள் உள்ளன. இவை யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னங்களாகும். தனித்துவமான கட்டடக் கலைக்காக அறியப்படுகின்றன. செங்குத்தான கோணங்கள், குறுகிய உச்சி கொண்டவை. இவை எகிப்திய பிரமிடுகளிடமிருந்து மாறுபடுகின்றன.
அதே சமயம் எகிப்தில் உள்ள கிசா பர்மிட் வளாகத்தினுள் "குஃப்பு' என்ற பெரிய பிரமிடு உள்ளது. அடுத்ததாக கஃப்ரே பிரமிட், மென்செளரே பிரமிட் ஆகியன உள்ளன.
"குஃப்பு' பிரமிடு கி.மு.2,580-2,560 ஆண்டுகளிடையே எழுப்பப்பட்டது. முதலில் இதன் உயரம் 144.6 மீட்டராக இருந்தது. பல நூற்றாண்டுகளில் அதன் வெளிப்புறக் கற்களை இழந்ததால், தற்போது 138.8 அடியாகிவிட்டது. அடித்தளம் 13.1 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இது உலகின் பழைய ஏழு அதிசயங்களில் ஒன்று.
பெரிய சுண்ணாம்பு, கிரானைட் கற்களைக் கொண்டு எழுந்துள்ளது. பொறியியல் திறனுக்கு சான்றாகவும் உள்ளது. இதுவே உலகின் மிகப் பிரபலமான, மிகப் பெரிய பிரமிட் என்று அறியப்படுகிறது. உண்மையில் உலகின் மிகப் பெரிய பிரமிட் மெக்சிகோவில் உள்ள "சோலுலா' என்ற பிரமிட். இது 66 மீட்டர் உயரமுள்ள இந்த பிரமிடின் ஒவ்வொரு பக்கமும் 450 மீட்டர் கொண்டவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.