கே. ஆர். எஸ். ஃபிலிம்டம் நிறுவனத்தின் சார்பில் உருவாகி வரும் படம் 'பாய்'. புதுமுகங்கள் ஆதவா ஈஸ்வரா, நிகிஷா, தீரஜ் கெர், இயக்குநர் கிருஷ்ணா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார் கமலநாதன் புவன். படம் குறித்து இயக்குநர் பேசும் போது... '' மதங்களைக் கடந்து மனிதாபிமானம் பற்றி பேசுவதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கோவை குண்டு வெடிப்பை யாராலும் மறக்க முடியாது. இந்தப் படம் கோவை குண்டுவெடிப்பு பிரச்னைகளைப் பற்றி பேசுகிறது. கதையின் முதல் பாதியில் கேள்விகளாகவும் இரண்டாவது பாதியில் அதற்குரிய பதில்களாகவும் வரும்படி இந்த திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு காட்சிகள் இருக்கும். எங்கள் கதைப்படி யோசித்து நாங்கள் உருவாக்கி இருந்த சில காட்சிகள் தணிக்கைத் துறையால் வெட்டப்பட்டன. காட்சிகளில் ஏழு நிமிடங்கள் வெட்டப்பட்டு இரண்டரை நிமிடங்களாகத் தந்தார்கள்.
வெட்டப்பட்ட காட்சிகளுடன் படத்தைப் பார்த்த போது எங்களுக்குப் பெரிய குறையாகத் தெரிந்தது. எனவே அவர்கள் சொன்ன வெட்டுகளை ஈடு செய்யும் முறையில் காட்சிகளை மாற்றி மீண்டும் படப்பிடிப்பு நடத்தி இணைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம்.
அதற்காக மீண்டும் ஒருமுறை சென்சார் செய்ய வேண்டி இருந்தது. நாங்கள் சாதாரணமாக நினைப்பதை சென்சாரில் வேறு ஒரு கோணத்தில் பார்த்து ஆட்சேபத்துக்குரியதாக மாற்றுகிறார்கள். அது எங்களுக்குப் பெரும் சிரமத்தைக் கொடுத்தது. கதையின் ஓட்டத்திற்குத் வேகத்தடையாக இருக்கும் என்று பாடல்கள் இல்லாமல் இந்தப் படம் உருவாக்கியுள்ளோம்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.