நூற்றாண்டுக்கு மேலாக ஆன்மிகப் பணியில் புத்தக நிறுவனம்...

ஸ்ரீகிருஷ்ண பக்தியில் சிறந்தவரான 'ஸ்ரீஜயதால்ஜி கோயந்தகா' என்பவர் 'ஸ்ரீமத் பகவத் கீதை' என்ற ஆன்மிக நூலை உலகம் எங்கும் பரப்பும் எண்ணத்தோடு, பிரசாரத்துக்காக 'கீதா பிரஸ்' என்ற நிறுவனத்தை 1923இல் கோரக்பூரில் நிறுவினார்.
நூற்றாண்டுக்கு மேலாக ஆன்மிகப் பணியில் புத்தக நிறுவனம்...
Published on
Updated on
1 min read

ஸ்ரீகிருஷ்ண பக்தியில் சிறந்தவரான 'ஸ்ரீஜயதால்ஜி கோயந்தகா' என்பவர் 'ஸ்ரீமத் பகவத் கீதை' என்ற ஆன்மிக நூலை உலகம் எங்கும் பரப்பும் எண்ணத்தோடு, பிரசாரத்துக்காக 'கீதா பிரஸ்' என்ற நிறுவனத்தை 1923இல் கோரக்பூரில் நிறுவினார்.

ஸ்ரீஜயதயால்ஜிக்கு ஸ்ரீகிருஷ்ணரின் தரிசனம் மிகச் சிறிய வயதிலேயே கிடைத்தது என்றும் பகவத் கீதையை உலகெங்கும் பிரசாரம் செய்யும்படியும் ஆணையும் பிறந்தது என்று அவரது வரலாறு கூறுகிறது.

கீதா பிரஸ்ஸின் முக்கியமான பணி குறைந்த விலையில் கீதை, நல் இலக்கியங்களைப் பிரசுரம் செய்வது, மக்களிடம் எத்தகைய பொருளுதவியையோ, சந்தாவாகவோ பெறாமல் இந்தப் பணியை சீராக, வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

199293இல் மட்டும் நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள நூல்களை மக்களுக்கு இந்த நிறுவனம் கிடைக்கச் செய்துள்ளது. ஒரு ஆண்டுக்கு 2,500 டன் காகிதத்தைப் பயன்படுத்தியுள்ளது.

1923 முதல் 1992 வரை வெளியான நூல்கள் வருமாறு:

 'கல்யாண்' என்ற ஹிந்தி மொழியில் மாத இதழையும், 'கல்யாண் கல்பதரு' என்ற ஆங்கில மாத இதழையும் வெளியிடுகிறது. கல்யாண் தற்போது இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகிறது. ஆண்டின் முதல் இதழ் சிறப்பிதழாக வெளிவருகிறது.

'ஸ்ரீமத் பாகவதம்', 'வால்மிகி ராமாயணம்', 'ஸ்ரீராமசரித மானஸம்' ஆகியவற்றின் ஆங்கில மொழியாக்கம் 'கல்யாண் கல்பதரு' மூலம் வெளியாகியுள்ளது. ஹிந்தி, ஆங்கிலம், வங்காளி, தமிழ், மராத்தி, குஜராத்தி, உருது, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நூல்கள் வெளியாகின்றன. இவற்றில் எந்தவிதமான விளம்பரங்களும், மற்றைய நூல்களின் மதிப்புரைகளும் இடம்பெறுவதில்லை.

ராஜஸ்தானில் உள்ள 'சுரூ' என்ற இடத்தில் ரிஷிகுலம் எனும் 'பிரம்மச்சர்யாச்ரமம்' அமைக்கப்பட்டுள்ளது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பிரம்மச்சாரிகள் பயிலும் பாட சாலை ஒன்றும் நடைபெற்றுவருகிறது.

 கொல்கத்தாவில் உள்ள 'கீதா பிரஸ்' அலுவலகத்தின் முக்கிய அலுவலகம் 'கோவிந்தபவன் கார்யாலயம்' என்று அழைக்கப்படுகிறது. இங்கே தினமும் தொடர்ந்து சாதுக்களின் பிரவசனமும், கீதா பாராயணமும் நடைபெற்றுவருகின்றன.

'கீதா பிரஸ்' இயக்கம் ஆன்மிகப் பணிகளோடு நின்றுவிடாமல் பிற தொண்டுகளில் தீவிரமாக ஈடுபாடு கொண்டு செயலாற்றி வருகிறது. வெள்ளம், பஞ்சம், வறட்சி, நிலநடுக்கம், தீவிபத்து போன்ற பாதிப்புகளிலும் உதவிக்கரம் நீட்டுகிறது. இந்த நிறுவனமும் அரசும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com