த.நாகராஜன்
'உலகின் மிகவும் வயதான முதியவர்' என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரர்தான் இங்கிலாந்தின் சர்ரேயில் வசிக்கும் எத்தேல் கேட்டர்ஹாம். இவருக்கு வயது 115 ஆண்டுகள், எட்டு மாதங்கள்.
இவர் 1927-இல் இந்தியாவுக்கு தனது பதினெட்டாம் வயதில் வந்து, ஆங்கில ராணுவ அதிகாரியின் வீட்டில் குழந்தைகளை வளர்ப்பதில் உதவியாளராக மூன்று ஆண்டுகள் வேலை பார்த்தார். 1931-இல் இங்கிலாந்து திரும்பிய எத்தேல் நார்மன் கேட்டர்ஹாமை சந்தித்து, 1933-இல் திருமணம் செய்தார். எத்தேல் ராணுவத்தில் சேர்ந்து லெப்டினன்ட் கர்னலானார், எத்தேல் ஜோடியினர் ஹாங்காங், ஜிப்ரால்டரில் பணிபுரிந்துள்ளனர்.
எத்தேல் தற்போது சர்ரேயின் லைட்வாட்டரில் உள்ள ஒரு பராமரிப்பு இல்லத்தில் வசித்து வருகிறார். தனது 116 வயதில் பிரேசிலிய கன்னியாஸ்திரி சகோதரி இனா கனபரோ லூகாஸ், அண்மையில் இறந்த பிறகு எத்தேல் உலகின் மிக வயதான நபர் என்ற பெருமையைப் பெற்றார். எத்தேல் 97 வயது வரை கார் ஓட்டிஇருக்கிறார். இவரது உடன் பிறப்புகளும் நூறு வயதைத் தாண்டி வாழ்ந்தனர்.
2024 ஆகஸ்டில் நடைபெற்ற எத்தேலின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது, 'நான் யாருடனும் ஒருபோதும் நான் வாக்குவாதத்தில் ஈடுபட்டது கிடையாது. பிடித்ததைக் கேட்டு பெறுங்கள். பிடித்ததைச் செய்யுங்கள். இவைதான் நீண்ட நாள் வாழுவதன் ரகசியம்' என்று கூறியுள்ளார்.
டைட்டானிக் கப்பல் கடலில் விபத்துக்குள்ளானது, முதலாம் இரண்டாம் உலகப் போர், ரஷியப் புரட்சி, தொழில் மந்த நிலை, தொழில் புரட்சி, போன்ற உலகின் மகா சம்பவங்களைக் கடந்து எத்தேல் வந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.