இந்தியர்கள் ரசிக்க விரும்பும் தாய்லாந்து...
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தியர்கள் அதிகம் பயணிக்கும் நாடு தாய்லாந்து. இந்த நாட்டை காண 2024-ஆம் ஆண்டில் வருகை தந்த ஒரு கோடி சுற்றுலாப் பயணிகளில், இந்தியர்கள் மட்டும் 21 லட்சம் பேர்.
இந்தியாவிலிருந்து தாய்லாந்தின் தலைநகர் பேங்காக்குக்கு ஆண்டுக்கு 342 விமானங்கள் பயணிக்கின்றன. தற்போது ஹைதராபாத், விசாகப்பட்டிணத்திலிருந்தும் பாங்காக்குக்கு விமானங்கள் இயங்குகின்றன.
இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவை தாய்லாந்து வழங்கியுள்ளது. குறிப்பாக, நவம்பர்-பிப்ரவரி இடையே இந்தியாவில் குளிர்கால பள்ளி விடுமுறை என்பதால், அப்போது சுற்றுலாப் பயணிகள் வகுகை அதிகமாகவே இருக்கிறது.
தாய்லாந்து அழகிய கடற்கரைகள் கொண்டது. மலிவு விலையில் தங்கும் விடுதிகள், துடிப்பான இரவு வாழ்க்கை கொண்டது. நீர் விளையாட்டுகளுக்கும் பிரபலம்.
சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவியும் இடமான ஃபுக்கட் தீவு என்பதே தாய்லாந்தின் மிகப் பெரிய தீவு. அழகான கடற்கரைகள்,பளிங்கு போன்ற நீர்,வெதுவெதுப்பான சீதோஷ்ண நிலை, புத்த விகார்கள், விநாயகர்-பிரம்மா-சிவன் கோயில்கள் பிரபலம். இங்குள்ள கடற்கரைகளில் படாங் கடற்கரை மிக பிரபலம்.
வாட்சலாங் பெரிய புத்தர் சிலை,மறைந்துள்ள குகைகள், ஜேம்ஸ்பாண்ட் படத்தில் இடம் பெற்ற கடற்கரை என பார்க்க வேண்டிய இடங்கள் அதிகமாகவே உள்ளன.
பாங்காக் நகரில் அற்புதமான புத்த விகார்கள் உள்ளன.
வாட்ஃப்ரா கேவ் எமரால்டு புத்த விகார், பாங்காக் நகரின் மையத்தில் அமைந்துள்ள ஒரு தங்க அரண்மனை அவசியம் காண வேண்டிய இடங்களாகும்.
வாட் அருண் சாவோ,பிரமியா ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு உயரமான கோபுரம் கொண்ட புத்த விகார், 'தேன் விழிக்கும் கோயில்' என அழைக்கப்படுகிறது. சூரியன் காலையில் உதயமாகும்போது, பொன் நிறமாகத் தெரியும். சூரியனின் தேரோட்டியான அருண் என்ற நபரின் பெயரால், இந்தப் பகுதி அழைக்கப்படுகிறது.
யானைகள் சரணாலயம்: பேங்காக் உள்ளிட்ட சில இடங்களில் யானைகளின் சரணாலயங்கள் உள்ளன.இவற்றில் சியாங் மாய் யானைகள் சரணாலயம் மிகவும் பிரபலம்.
இங்கு யானையுடன் நேரத்தை செலவிடலாம். அவர்களுக்கு குளிப்பாட்டி, உணவு அளித்து, பேசியும் பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.