அட்டைகள், எண்கள், பெயர்கள், படங்கள், வார்த்தைகளின் வரிசையை சில விநாடிகளே பார்த்தவுடன் அதை நினைவுப்படுத்தி, தவறில்லாமல் எழுதி, 'மெமரி லீக் உலக சாம்பியன்' எனும் பட்டத்தை புதுச்சேரியைச் சேர்ந்த இருபது வயதான மாணவர் விஸ்வா ராஜகுமார் பெற்றுள்ளார்.
இவரால் 80 ரேண்டம் முறையில் கணினியால், அந்தக் கணத்தில் தேர்ந்தெடுக்கப்படும் 80 இலக்க எண்களை சரியாக வெறும் 13.50 விநாடிகள் பார்த்து நினைவில் வைத்துகொண்டு கணினித் திரையை மூடி, இன்னொரு திரையில் பார்த்த எண்களை வரிசை பிசகாமல் அப்படியே பதிவு செய்துள்ளார்.
இதோடு, அவர் 8.53 விநாடிகளில் 30 படங்களைப் பார்த்து நினைவில் நிறுத்தி, அவை என்னென்ன படங்கள் என்று சரியாகவும் வரிசைப்படுத்தியுள்ளார்.
புதுச்சேரி 'மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி மாணவரான விஸ்வா ராஜகுமார், ஜனவரி 5 முதல் பிப்ரவரி 2 வரை 'மெமரி லீக் உலக சாம்பியன்' போட்டியில் கலந்துகொண்டார். ஐந்து சுற்றுகளைக் கொண்டிருந்தது.
மனதில் மூளையில் பதிவேற்றம் செய்து, அதை திரும்பவும் எழுதிக் காட்ட வேண்டும் என்ற சாம்பியன்ஷிப் போட்டியில் 'மெமரி லீக்' உலகத் தரவரிசையில் இருக்கும் முதல் 16 பேர் பங்கேற்றனர்.
போட்டியில் பங்கேற்பவர்களுக்குத் திரையில் 80 ரேண்டம் எண்கள் காட்டப்பட்டன. எண்களை மனதில் மூளையில் பதித்து குறைந்த நேரத்தில், அந்த எண்களை தனியாக டிஜிட்டல் திரையில் சரியாக எழுதிப் பதிவு செய்ய வேண்டும்.
இரண்டு நிமிடங்களுக்கு முன் ஒரு பொருளை மறந்து போய் 'எங்கு வைத்தோம்' என்று தேடுவோர் இருக்கும்போது, 80 இலக்க எண்ணை சில விநாடிகள் பார்த்து, அவற்றை மனதில் மூளையில் பதிவேற்றம் செய்து, பிறகு சற்றும் பிசகாமல் அப்படியே வரிசைக்கிரமத்தில் எழுதிக் காண்பித்தார் விஸ்வா ராஜகுமார். அந்த அளவுக்கு கூர்மையான நினைவாற்றலை பெற்றுள்ளார்.
'மூளை சுறுசுறுப்பாகச் செயல்பட தண்ணீர் அவசியம். மனப்பாடம் செய்யும்போது, நிறைய தண்ணீர் குடிக்கவில்லை என்றால், ஒருவரது செயல்படும் வேகம், பேச்சு வேகம். பேச்சின் ஒலி சற்று குறைவாகவே அமையும்.
நிறைய தண்ணீர் குடித்தால் தெம்புடன் இருக்கலாம். வேகமாக வாசிக்கலாம். மனதில் இருத்தலாம். நினைவாற்றல் பயிற்சியாளராக மாறுவது, நினைவாற்றலுக்கான நுட்பங்களை, யுக்திகளை விருப்பமானவர்களுக்குக் கற்பிக்க பயிற்சி நிலையங்களின் சங்கிலித் தொடரை உருவாக்க வேண்டும் என்பதுதான் லட்சியம்'' என்கிறார் விஸ்வா ராஜகுமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.