வைரமுத்து வரிகளில், ஸ்ரீ. பி. இசையில், ஸ்ரீதர் மாஸ்டர் நடன அமைப்பில், ஜி.வி. பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர் மற்றும் ரக்ஷிதா குரல்களில் வெளியாகியுள்ள ஆல்பம் செகண்ட் சான்ஸ். சபரி மணிகண்டன் இயக்கத்தில், வாழ்வில் இரண்டாவது வாய்ப்பின் அருமையை பேசுவதாக இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
மகேஷ் சுப்பிரமணியம், அம்மு அபிராமி இந்தப் பாடலில் நடித்துள்ளனர். ஆல்பம் உருவாக்கம் குறித்து இயக்குநர் பேசும் போது... ''தயாரிப்பாளர் மகேஷ் மூலம் தான் இந்த ஆல்பம் ஆரம்பமானது, இதற்காக அவர் மிகக் கடினமான உழைப்பைத் தந்துள்ளார்.
நீங்கள் நடிகராக ஆசைப்படுகிறீர்கள் நான் இயக்குநராக ஆசைப்படுகிறேன் அதனால் இதில் கண்டிப்பாக கதை இருக்க வேண்டும் என்றேன், முழு அர்ப்பணிப்புடன் உழைப்பைத் தந்தார். அம்மு அபிராமி இந்த பாடலை நம்பி வந்தார், ஷீட்டிங்கில் முழு ஒத்துழைப்பு தந்தார். அவருக்கு என் நன்றி. 10 மணிக்கு சொன்னால் 9 மணிக்கு வந்து விடுவார்.
ஸ்ரீதர் மாஸ்டர் அவர் நடன அமைப்பு, எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த முழுப் பாடலும் என் கூடவே இருந்தார், அவர் பெயரால் தான் இந்த பாடல் தெரிகிறது அவருக்கு என் நன்றி. என் தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோருமே என் நண்பர்கள். வேலை பார்த்தால் கூட எனக்காக வந்து, செய்தனர்.
ஜீவி, நரேஷ் ஐயர் மற்றும் ரக்ஷிதா சுரேஷ்க்கு என் நன்றி, இந்தப்பாடல் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்படி செய்துள்ளோம் நன்றி. காதலில் நாம் செய்யும் தவறுகள், ஈகோ, அவசரம் நம்மை மீறிய கட்டத்திற்கு இழுத்து காதலை அழித்து விடுகிறது.
அப்படிப்பட்ட ஒருவனுக்கு அந்த தவறுகளை சரி செய்து கொள்ளும் வகையில் ஒரு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கிறது. அதனை அவன் எப்படி பயன்படுத்திக்கொள்கிறான் என்பது தான் இந்த ஆல்பம் பாடலின் கரு. காதலின் மறு பக்கத்தை அழகாக பேசும் இந்த ஆல்பம் பாடலை அனைத்து இசை தளங்களிலும் ரசிக்கலாம்'' என்றார் இயக்குநர்.