அறிவியல் கதை

'எக்ஸ் எக்ஸ் எக்ஸ்' படம் குறித்து...
அறிவியல் கதை
Published on
Updated on
1 min read

ஆறு வயது சிறுவன் நீச்சல் குளத்தில் இறந்து விடுகிறான். அது இயற்கை மரணமா ? என்று விசாரணை செய்வதற்காக போலீஸ் அதிகாரி ராவணன் வருகிறார். மகன் இறந்த விரக்தியில் மனநிலை பாதிக்கப்படுகிறார் தந்தை .

மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்க டாக்டர் கிரிஷ் என்பவர் வருகிறார். இது தவிர வானிலிருந்து பூமியை நோக்கி ஒரு விண்கல் வருகிறது. இதை விஞ்ஞானிகளும் எதிர் நோக்குகிறார்கள். தென்னிந்தியாவில் கேரள பகுதியை நோக்கி இவ்விண்கல் விழுகிறது.

இதனால் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்பதை விஞ்ஞான ரீதியாக சொல்லப்படுகிறது. இறந்து போன சிறுவனை பற்றி விசாரிக்கப்பட்டதா? இந்த விஞ்ஞான மாற்றத்திற்கும் தொடர்பு உண்டா? என்பதை விளக்கி அறிவியல் சார்ந்த படமாக உருவாகி வரும் படம் 'எக்ஸ் எக்ஸ் எக்ஸ்'. ஹாலிவுட் பாணியில் பட உருவாக்கத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. சினிமா பிளாட்பார்ம் பட நிறுவனம் சார்பில் ரித்திஷ் குமார் தயாரித்து இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடராஜ் நடிக்கிறார். டாக்டராக இயக்குநர் கே.பாக்யராஜ் நடிக்கிறார். சிங்கம் புலி, டீனா, ஆர்த்தி ஷாலினி, மாஸ்டர் இந்திரஜித் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு இயக்குநராக செல்வா. ஆர். பணியாற்றுகிறார். ப்ரேம்ஜி அமரன் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி கேரளா மற்றும் ஊட்டியில் ஒரே கட்ட படப்பிடிப்பாக நடைபெற்று வருகிறது. ஜூலை மாத இறுதியில் படம் திரைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com