
சுக்கரவர்த்தி
இந்திய அணி சார்பாக டெஸ்ட் மேட்சுகளிலிருந்து ஓய்வு என அறிவித்துவிட்ட விராட் கோலியை இந்தியாவுக்கு ஆடலைன்னா என்ன ? எங்க அணிக்கா ஆடுங்க?'' என்று இங்கிலாந்தின் கவுண்டி அணி அணுகியுள்ளது. தற்போது கோலி, தனது குடும்பத்துடன் லண்டனில் தங்கியிருக்கிறார். இதனால் அவர் கவுண்டி அணிக்காக விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்னும் இரண்டு ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் கோலி விளையாடுவார்' என்று எதிர்பார்ப்பு கிரிக்கெட் ஆர்வலர்களிடத்தில் இருந்தது. ஆனால் முப்பத்து ஆறு வயதில் கோலி டெஸ்ட் மாட்சுகள் ஆடுவதிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
இதைத் தவிர, 10 ஆயிரம் ரன்கள் குவிக்க வேண்டும் என்ற லட்சியத்தில் கோலி பயணித்தார். ஆனால் அவரது விளையாட்டு எதிர்பார்த்தபடி அமையவில்லை. கிரிக்கெட் வாரியமும் கோலியின் சரிவை கண்காணித்துவந்தது. கோலி டெஸ்ட் மேட்சுகளிலிருந்து ஓய்வு பெற இதுவும் ஒரு காரணம்.
கோலி ஓய்வு பெற்றதும், இங்கிலாந்து கவுன்டி அணிகளில் ஒன்றான மிடில்செக்ஸ்' அணி வாங்க...எங்களுக்காக விளையாடுங்க' என்று கோலிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து மிடில்செக்ஸ்' அணியின் இயக்குநர் ஆலன் கோல்மன், இந்தத் தலைமுறையின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி. இந்த ஒரு காரணத்துக்காகவே விராட் கோலியை எங்கள் அணியுடன் இணைந்து விளையாட வருமாறு முயற்சிகளைச் செய்துகொண்டுள்ளோம்'' என்றார்.
தொடர்ந்து விராட் கோலி இங்கிலாந்து மண்ணில் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவாரா' என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதுவரை விராட் கோலி இங்கிலாந்து கவுன்டி' போட்டிகளில் விளையாடியது இல்லை. 2018-இல் ஒருமுறை கோலி சர்ரே' அணிக்காக விளையாடுவதாக இருந்தது.
அந்த காலகட்டத்தில் நடக்க இருந்த இங்கிலாந்து தொடருக்கு முன்பாக பயிற்சி பெறும் வகையில் ஒரு போட்டியில் விளையாடுவதற்கு விராட் கோலி விரும்பினார். அப்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு போட்டியும் நடக்க இருந்தது. இந்த இரண்டு போட்டிகளிலும் கோலி விளையாடி தன்னைத் தயார் செய்து கொள்ளலாம் என முடிவு செய்திருந்தார்.
ஆனால் கிரிக்கெட் ஆடியபோது கோலிக்கு கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அவ்விரு போட்டிகளிலும் கோலி விளையாட முடியாமல் போய்விட்டது. கோலி கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடியதில்லை' என்ற நிலைமை மாறுமா ? கோலி எடுக்கப் போகும் முடிவில் தெரியவரும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.