திரைக் கதிர்

திரைக் கதிர்

இயக்குநர் மணிரத்னம் 'பைசன்' படத்தைப் பார்த்து மாரிசெல்வராஜை பாராட்டியிருக்கிறார்.
Published on

இயக்குநர் மணிரத்னம் 'பைசன்' படத்தைப் பார்த்து மாரிசெல்வராஜை பாராட்டியிருக்கிறார். 'இப்போதுதான் படத்தைப் பார்த்தேன் மாரி. ரொம்பப் பிடித்திருந்தது. நீதான் அந்த 'பைசன்'. உன் படைப்பைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன். இதனைத் தொடர்ந்து செய். உன் குரல் முக்கியமானது!'' என்று மணிரத்னம் பாராட்டி இருக்கிறார்.

'பரியேறும் பெருமாளிலிருந்து என் படைப்புகள் அத்தனையையும் பார்த்து கவனித்து பாராட்டி என்னை ஊக்கப்படுத்தும் உங்கள் அத்தனை வார்த்தைகளுக்கும் என் நன்றியும் பேரன்பும் எப்போதும் சார்!'' என்று மாரிசெல்வராஜ் மணிரத்னத்திற்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'தி கேர்ள்ஃபிரண்ட்' திரைப்படம் நவம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில், நடிகைகளின் வேலை நேரம் குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் தற்போது நடந்து வருவதைக் குறிப்பிட்டு, தனது வேலை நேரம் குறித்துப் பேசியிருக்கிறார் ராஷ்மிகா.

இப்படத்தின் தயாரிப்பாளர் ராஷ்மிகாவைப் பாராட்டி, 'வேலை நேரத்தைப் பற்றி எந்தக் கோரிக்கையும் வைக்காத ஒரே நடிகை இவர்தான்'' எனப் பாராட்டினார். உடனே இடைமறித்த ராஷ்மிகா, 'நான் அதிகமாகவே வேலை செய்கிறேன். ஆனால், இதை யாருக்கும் பரிந்துரைக்க மாட்டேன். இதைத் தொடர்ந்து செய்யமுடியாது!'' என்று தெரிவித்தார்.

சமீபத்தில் வெளியான 'டியூட்' படத்தில் நடித்திருந்தார் மமிதா பைஜூ. விஜய்யின் 'ஜனநாயகன்', 'சூர்யா 46', 'தனுஷ் 54' படங்களிலும் நடிக்கிறார். சினிமா பயணம் குறித்துப் பேசியிருக்கிறார் மமிதா. 'சினிமா என் வாழ்க்கையில் தற்

செயலாக வந்ததுதான். நான் 9-ஆம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது 'சர்வோபரி பலக்காரன்' என்ற படத்தில் நடிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்தது. என் பெற்றோரிடம் சினிமாதான் என் வாழ்க்கைப் பாதை என்று சொன்னேன். அவர்களும் எனக்கு ஆதரவு கொடுத்தார்கள்!'' என்று மமிதா பைஜூ பகிர்ந்திருக்கிறார்.

ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்த 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களை ஒன்றாக இணைத்து 'பாகுபலி எபிக்' என்ற டைட்டிலில் முழு நீள திரைப்படமாக இந்த வாரம் ரீ-ரிலீஸ் செய்கிறார்கள். சமீபத்தில் நடிகர் ஜெகபதி பாபுவுடனான நேர்காணலில் ரம்யா கிருஷ்ணன் தனது திரை வாழ்க்கை குறித்து பல விஷயங்களைப் பேசியிருக்கிறார்.

தொடர்ந்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்த அவர், மறைந்த நடிகை செளந்தர்யா பற்றியும் அந்தப் பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். 'படையப்பா' படத்தில் அவர்கள் இருவரும் இணைந்து நடித்த காட்சியைப் பார்த்துக் கண்கலங்கினார் ரம்யா கிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com