முன்னாள் முதல்வர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை 'காமராஜ்' என்ற பெயரிலும், மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை 'வெல்கம் பேக் காந்தி' என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத் தயாரிப்பில், இயக்குநர் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், குறளை மையமாக வைத்து உருவான படம் 'திருக்குறள்'.
இப்படம் திரையரங்குகளில் வெளியானது. உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலகம் முழுக்க உள்ள மக்களுக்குக் கொண்டு செல்லும் வகையில், இப்படம் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தை உலகம் முழுவதும் உள்ளவர்கள் இணையத்தில் இலவசமாகக் காணும் விதத்தில் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இயக்குநர் பேசும் போது, 'பெரும் முயற்சிக்குப் பின் இந்தப் படத்தை உருவாக்கி வெளியிட்டோம். வரவேற்பு இருந்த அளவுக்குத் திரையரங்குக்குச் சரியான அளவில் ரசிகர்கள் வரவில்லை.
பெரும் பொருள் செலவில் உருவான இப்படத்தை மக்கள் அனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என நினைத்தேன். அதனால் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று, யூ டியூப் தளத்தில் இலவசமாக வெளியிடலாம் என முடிவு செய்தோம்.
ராம்ராஜ் குழுமத் தலைவர் நாகராஜ் விளம்பரம் தந்து, 'வெறும் கார்ட் மட்டும் போடுங்கள்' என்று பெருந்தன்மையோடு சொன்னார். அவருக்கு நன்றி!' என்றார் இயக்குநர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.