கன்னட திரையுலகத்திலிருந்து வரும் படங்கள் சமீபாக கவனம் பெறுகின்றன. 'கே.ஜி, எஃப்.', 'காந்தாரா' உள்ளிட்ட படங்கள் உலக அளவில் கவனிக்கப்பட்டதுடன், மிகப் பெரிய வசூலையும் குவித்தது. அந்த வரிசையில் கன்னடத்திலிருந்து பல படங்கள் வெளியாகி வருகின்றன.
அந்தப் படங்கள் பெற்ற வரவேற்பைப் போலவே கன்னடக் கலைஞர்கள் கூட்டணியில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது 'கரிகாடன்'.
இப்படத்தின் டீசர் வெளியான குறுகிய காலத்திலேயே இரண்டு மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
இப்படத்தில் காடா நடராஜ், நிரிக்ஷா ஷெட்டி, ரித்தி, மஞ்சு சுவாமி, யாஷ் ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் கில்லி வெங்கடேஷ்.
இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ள காடா நடராஜ், கவனமாகத் திட்டமிடப்பட்டு இதன் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். ரித்தி எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கும் அவரது மனைவி தீப்தி தாமோதர், சகோதரர் ரவிக்குமார் மற்றும் நண்பர் திவாகர் ஆகியோர் அவரது திரை உலகக் கனவை நிறைவேற்றத் துணை நின்றுள்ளனர்.
ஜீவன் கவுடாவின் ஒளிப்பதிவு சிக்கமகளூரு, கலாசா, குத்ரேமுக், மண்டியா மற்றும் சக்கராயபட்னாவின் அழகைப் படம்பிடித்திருக்கிறது. தீபக் சி.எஸ்.ஸின் எடிட்டிங் செய்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தாய் கிழவி - இந்தக் காட்சியை ஏன் நீக்கினர்?

மேஷ ராசிக்கு பணவரவு: தினப்பலன்கள்!

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: தனுசு

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாயில் பொருத்தப்பட்ட இரும்பு ஷட்டா்கள்!
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

