திரைக்கதிர்

'தேவர் மகன் 2' படத்தில் கமல், சூர்யா காம்பினேஷன் திட்டம் கைவிடப்படவில்லை'' என்கிறது ஆழ்வார்பேட்டை வட்டாரம்.
கமல்
கமல்
Published on
Updated on
2 min read

* கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கவிருந்த படத்தை சுந்தர். சி இயக்க இருந்தார். இந்நிலையில் அந்தப் படத்திலிருந்து அவர் விலகியுள்ளார். இந்நிலையில் அண்மையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், ''இந்தப் படத்திலிருந்து சுந்தர். சி விலகிவிட்டதாக அவரே சொல்லிவிட்டார். அதன் பின் எப்படி மூவரும் இணைய முடியும்?என்னைப் பொறுத்தவரை நான் இப்படத்தின் தயாரிப்பாளர். என்னுடைய நட்சத்திரத்துக்குப் பிடித்த கதையைத்தான் நான் எடுக்க முடியும்; அதுதான் ஆரோக்கியமானது. அவருக்குப் (ரஜினி) பிடிக்கும் வரை நாங்கள் கதையைக் கேட்டுக்கிட்டே இருப்போம். நல்ல கதை கிடைத்தவுடன், நிச்சயம் என்னுடைய தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் வெளியாகும்'' என்று கூறியிருக்கிறார்.

அர்ஜுன்
அர்ஜுன்

*அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'தீயவர் குலை நடுங்க' திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. இப்படம் சார்ந்த செய்தியாளர் சந்திப்பில் அர்ஜுன் பேசுகையில், ''எனக்கு ஒவ்வொரு படமும் முதல் படம் மாதிரி தான். இந்த 'தீயவர் குலை நடுங்க' படமும் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். நிறைய அறிமுக இயக்குநர்களோடு சேர்ந்து நான் பணியாற்றியிருக்கிறேன். 'ஜென்டில்மென்' படமும் அப்படித்தான். அதில் ஒரு சுயநலம் இருக்கிறது என்று சொல்லலாம். முதல் படம் எடுக்கும் இயக்குநர்கள் எனர்ஜியுடன் செயல்படுவார்கள். நான் நிறைய படங்கள் செய்திருக்கிறேன். ஆனால், இது கொஞ்சம் தனித்துவமான திரைப்படம்'' என்று தெரிவித்துள்ளார்.

சூரி
சூரிSilverscreen Inc.

* சூரியும் அஜித்தும் இயக்குநர் சிவா இயக்கத்தில் 'வேதாளம்' படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அந்தப் படத்துக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. அஜித்தைச் சந்தித்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சூரி, அவருடைய சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், ''அவரைப் பார்த்த நொடியிலேயே புரிந்தது, உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதல்ல; அது தினமும் உழைப்பாலும், மனவலிமையாலும் சம்பாதிக்கப்படுவது. அவருடன் நடந்த அந்த உரையாடல் அமைதியாக இருந்தாலும், ஆழமான அர்த்தம் கொண்டது.'' எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்கவிருக்கிறார்.

சூர்யா
சூர்யா

* கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு 'தேவர் மகன் 2' எடுப்பதாக ராஜ்கமல் பிலிம்ஸ் முடிவு செய்தது. முன்பு சிவாஜி - கமல் காம்பினேஷன் போலவே இப்போது கமல் - சூர்யா இணைவது என்றும் திட்டமிடப்பட்டது. இடையில் கமல் என்ன நினைத்தாரோ தெரியவில்லை... இப்போது பழைய தேவர் மகன் படத்தை மீண்டும் நவீன 5 கே தொழில்நுட்பத்தில் வெளியிடத் தயாராகிவிட்டார். ஒரு வேளை 'தேவர் மகன் -2' திட்டம் கைவிடப்பட்டதா என்பது குறித்து கமலுக்கு நெருக்கமான புள்ளிகளிடம் விசாரித்தோம்.

''இந்தத் தலைமுறை இளைய தலைமுறை. பழைய தேவர் மகன் படத்தை பார்த்தது இல்லை. இப்போது புதுப் படத்துக்கு இசையமைப்பது போல 'தேவர் மகன்' படத்துக்கு ரீ ரெக்கார்டிங் பார்த்து பார்த்து பிரமாதமாகச் செய்திருக்கிறார்கள். திரையில் படத்தைப் பார்ப்பவர்கள் பிரமித்துப் போவார்கள். 'தேவர் மகன் 2' படத்தில் கமல், சூர்யா காம்பினேஷன் திட்டம் கைவிடப்படவில்லை'' என்கிறது ஆழ்வார்பேட்டை வட்டாரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com