செயற்கை நுண்ணறிவின் தந்தை...!

செயற்கை நுண்ணறிவுக்கான (ஏ.ஐ.) விதையை ஊன்றிவர் என்ற பெருமை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆலன் டுரிங் என்ற தர்க்கவியலாளரையே சாரும்.
செயற்கை நுண்ணறிவு (கோப்புப்படம்)
செயற்கை நுண்ணறிவு (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

செயற்கை நுண்ணறிவுக்கான (ஏ.ஐ.) விதையை ஊன்றிவர் என்ற பெருமை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆலன் டுரிங் என்ற தர்க்கவியலாளரையே சாரும்.

இவர் 1930-களில் தான் எழுதிய கட்டுரைகளில், 'கணினிகள் மூலம் தர்க்கரீதியான பணிகளைச் செய்யும் திறனைக் கொண்டு வரலாம்' என்ற கருத்துகளை முன்வைத்திருந்தார்.

அதற்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் மெக்கார்த்தி என்ற கணினி விஞ்ஞானி செயல்வடிவத்தை அளித்தார். எனவேதான் இவர் 'செயற்கை நுண்ணறிவின் தந்தை' என அழைக்கப்படுகிறார்.

அமெரிக்காவில் உள்ள டார்க் மௌத் கல்லூரியில் விஞ்ஞான விசாரணைத் துறையின் ஒரு பிரிவாக ஏ.ஐ.யை ஜான் மெக்கார்த்தி உருவாக்கினார். அதாவது, 'செயற்கை நுண்ணறிவு' என்ற சொல்லை இவர்தான் முதலில் பயன்படுத்தினார்.

அதன்பின்னர், கணிதப் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட இயந்திரமான 'டிஜிட்டல்' கணினிகளில் கண்டுபிடிப்பு செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சிக்கு முக்கிய உந்துச் சக்தியாக அமைந்தது. இருந்தாலும், சுமார் 50 ஆண்டுகளாக இதில் பெரிய அளவிலான முன்னேற்றம் எதுவும் இல்லை.

அண்மைக்காலமாக ஏ.ஐ. முக்கியத்துவம் பெற்று பிரபலமானது. தரவுகள் அதிகரிப்பு, கணினியின் திறன், சேமிப்பில் ஏற்பட்ட முன்னேற்றம் போன்றவையே இதற்கு முக்கியமான காரணங்களாகும்.

ஓபன் ஏ.ஐ.: ஓபன் ஏ.ஐ. நிறுவனம் உருவாக்கிய சாட் ஜி.பி.டி. இணையம் உலக அளவில் அதிகப் பயனாளிகளைக் கொண்ட தளமாக மாறியுள்ளது. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், 'சாட் ஜி.பி.டி.க்கு மாதம்தோறும் 500 கோடியே 80 லட்சம் பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர்' என்று தெரியவந்தது. இது 'கூகுள்' நிறுவனத்தின் ஜெமினி ஏ.ஐ.யைவிட 10 மடங்கு அதிகமாகும்.

-கோட்டாறு ஆ.கோலப்பன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com