'லிஃப்ட்' படத்தின் இயக்குநர் வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. தலைப்பு ஏதும் முடிவு செய்யப்படாமல், படப்பிடிப்புப் பணிகள் நடந்து வந்தன.
இப்படத்தினை இடா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்துக்கு 'தாஷமக்கான்' என்ற டைட்டில் வைக்கப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் விடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. சென்னையில் குறைந்த விலையில் நல்ல சுவையான அசைவ உணவுகளுக்குப் பெயர்போன ஏரியாதான் இந்த 'தாஷமக்கான்'.
இதன் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசியிருக்கும் ஹரிஷ் கல்யாண், ''தாஷமக்கான்' ஏரியா பற்றி நிறையப்பேர் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அதன் உலகம் பற்றி நமக்குப் பெரும்பாலும் தெரியாது. அங்கிருந்துதான் சென்னை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு அசைவ உணவு விநியோகம் செய்யப்படுகிறது. அசைவ உணவு தலைநகரம் என்றே சொல்லலாம்.
இந்தப் படத்தில் ராப் இசைப் பாடகராக நடித்திருக்கிறேன். இசைக் கலைஞர்களுடன் பழகி, அவர்களைப் பார்த்து அவர்களுடைய அசைவுகள், ஸ்டைல், ராப் பாடும் விதம் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு நடித்திருக்கிறேன். ராப் இசை மூலமாக புரட்சியே செய்கிறார்கள். அப்படியான ராப் இசைக் கலைஞராகத்தான் நான் நடித்திருக்கிறேன்.
நிறையப்பேர் இந்தப் படத்தோட கதையைக் கேட்டு நடிக்கவில்லை. நான் அதை ஒரு சவாலாக எடுத்து, இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். வடசென்னை பற்றி நிறையப்படம் வந்திருக்கிறது. ஆனால் இந்தப் படம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.'' என்று பேசியிருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதர்வாவின் இதயம் முரளி படத்தின் படப்பிடிப்பு விடியோ!
வேண்டுமென்றே ஆபாசமாக எடுத்திருக்க மாட்டார்கள்..! பெத்தி பட சர்ச்சைக்கு கங்கனா ரணாவத் பதில்!
விக்ரமின் சியான் - 63 படப்பிடிப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

பாடலுடன் தொடங்கும் ரஜினி - 173 படப்பிடிப்பு!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


