வெப் தொடர் ரேகை

கிரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ் குமார் நாவலின் மையக் கதையிலிருந்து ஈர்க்கப்பட்ட இயக்குநர் தினகரன் இயக்கியுள்ள வெப் தொடர் ரேகை.
வெப் தொடர் ரேகை
Updated on
1 min read

கிரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ் குமார் நாவலின் மையக் கதையிலிருந்து ஈர்க்கப்பட்ட இயக்குநர் தினகரன் இயக்கியுள்ள வெப் தொடர் ரேகை. இந்தத் தொடரில் பாலஹாசன், பவித்ரா ஜனனி மற்றும் வினோதினி வைத்தியநாதன் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தியாவின் முன்னணி ஓ.டி.டி. தளமான ஜீ 5 இந்தத் தொடரை தன் தளத்தில் வெளியிட்டுள்ளது.

உண்மை கண்முன்னே இருந்தும், நாம் கண்டுபிடிக்க முடியாத, ஓர் இருண்ட உலகத்துக்குள் பயணிக்கும் வகையிலான, புதிய அனுபவத்தைத் தரும் படைப்பை, ரசிகர்களுக்கு இந்தத் தொடர் வழங்கியிருக்கிறது. ஒவ்வொரு தடயமும் மேலும் குழப்பத்துக்குள் இழுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏழு எபிசோடுகள் கொண்ட கிரைம் திரில்லரான 'ரேகை' தொடர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வெளியாகியுள்ளது.

இந்தத் தொடர், பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் உருவாக்கிய குற்றக்கதை உலகின் கருவை எடுத்துக்கொண்டாலும், 'ரேகை' திரைக்கதையை இயக்குநர் தினகரன் முழுமையாக வடிவமைத்துள்ளார். ராஜேஷ் குமார் உலகக் கதைகளின் தளங்களில் ஆழமாகச் சென்று, சைக்கலாஜிக்கலாக புதிய தீவிரத்தை இக் கதைக்கு வழங்கியுள்ளார்.

உயிருடன் இருப்பவர்கள் மரணமடைந்ததாக பதிவு செய்யப்பட்டால், அதை எப்படி விசாரிப்பது? ஒரு குற்றம் எப்படி அடுத்தடுத்த குற்றங்களுக்குத் தொடர்ச்சியாகிறது என்பதை இந்தத் திரைக்கதையில் இயக்குநர் வடிவமைத்துள்ளார். மறைமுக போதை உலகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடிய வகையில் இந்தத் தொடர் வெளியாகியுள்ளது.

நம் கண்ணுக்குத் தெரியாமல் நடக்கும் வன்முறை குறித்து இந்தத் தொடர் பேசுகிறது. போலீஸில் புகாராகக் கூட மாறாத அந்த வன்முறை, பலர் வாழ்க்கையைச் சிதைக்கிறது. அந்த அசௌகரியத்தையும், யாரை நம்புவது என்ற குழப்பத்தையும் பார்வையாளர்கள் உணரவேண்டும் என்பதே என் நோக்கம்.'' என்கிறார் இயக்குநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com