10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

மனித உணர்வுகளின் பதிவு

அண்மையில் வெளிவந்த 'லாரா' திரைப்படம் உருவாக்கப்பட்ட விதம் ஊடகங்களால் பாராட்டப்பட்டது.

Updated On :

அண்மையில் வெளிவந்த 'லாரா' திரைப்படம் உருவாக்கப்பட்ட விதம் ஊடகங்களால் பாராட்டப்பட்டது. பட்ஜெட் படங்களில் எதிர்பாராத வகையில் ஆச்சரியம் அளித்த படம் என்று பத்திரிகைகள் எழுதின.

வணிக ரீதியாகவும் அந்தப் படம், வெற்றி பெற்றது. அதே தயாரிப்பாளர் கார்த்திகேசன் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார். 'அறுவடை' என்கிற பெயரில் உருவாகும் இந்தப் படத்தை அவர் இயக்குவதுடன் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். ஏற்கெனவே 'லாரா' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் தொடக்க விழா அண்மையில் கோவையில் நடைபெற்றவுடன் படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது.

கோவை, கோபிசெட்டிப்பாளையம், பவானி, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் முதல் கட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இப்படத்தில் கதாநாயகியாக சிம்ரன் ராஜூம், முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணனும் நடிக்கிறார்கள்.

மேலும் ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஆனந்த் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். ரகு ஸ்ரவண் குமார் இசையமைக்கிறார்.

படத்தொகுப்பு கே .கே . விக்னேஷ், பாடல்கள் - கார்த்திக் நேத்தா, கார்த்திகேசன், கானா சக்தி, நடனம் - ஏ. எம். ஜே. முருகன் என்று புதியபடக் குழு உருவாக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் கிராமத்து மண்ணையும், மனிதர்களையும், அவர்களது வாழ்வியலையும், பல விதப்பட்ட மனித உணர்வுகளையும் பதிவு செய்யும் படமாக உருவாகி வருகிறது 'அறுவடை'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.