திரைக் கதிர்

சமீபத்தில் நடிகை சாய் பல்லவியும் அவரின் தங்கையும் இணைந்து வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
சாய் பல்லவி
சாய் பல்லவி
Published on
Updated on
2 min read

சமீபத்தில் நடிகை சாய் பல்லவியும் அவரின் தங்கையும் இணைந்து வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. பூஜா கண்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாய் பல்லவியும் அவரும் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். இணையத்தில் சிலர் சாய் பல்லவியின் புகைப்படத்தைப் பகிர்ந்து விமர்சித்திருந்தனர்.

இந்த நிலையில் சாய்பல்லவி தன் தங்கையுடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் விடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, அதன் கேப்ஷனில் 'இது ஏஐ புகைப்படம் அல்ல உண்மையான புகைப்படம்' என்று தெரிவித்திருந்தார். வைரலான புகைப்படம் தற்போது அவர் வெளியிட்டுள்ள விடியோவில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரலட்சுமி சரத்குமார்
வரலட்சுமி சரத்குமார்n EOS 5D Mark III

வரலட்சுமி சரத்குமார் மற்றும் அவரது சகோதரி பூஜா சரத்குமார் இணைந்து தோசா டைரீஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் மூலம் தங்கள் முதலாவது தயாரிப்பை தொடங்கியிருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.

இந்தச் சிறப்பான துவக்கத்தில், 'சரஸ்வதி' என்ற படத்தின் மூலம், வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, பிரபல நட்சத்திரங்கள் பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா ஆகியோர் நடிக்கின்றனர்.

தமன் இசையமைக்கிறார், எட்வின் சகாய் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத்தொகுப்பு - வெங்கட் ராஜன், கலை இயக்கம் - சுதீர் மச்சர்லா. திரையுலகில் தங்கள் புதிய பயணத்தை தொடங்கும் இந்த முயற்சி, சகோதரிகள் இருவருக்கும் மறக்க முடியாத தொடக்கமாக அமைந்துள்ளது.

சிம்பு - வெற்றிமாறன் கூட்டணியை எதிர்பார்த்தவர்களின் காத்திருப்பு ஒரு முடிவுக்கு வரவுள்ளது. தற்பொழுது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிம்பு 49-இன் ப்ரோமோ விடியோவை வெளியிடத் தயாராகி உள்ளது படக்குழு. கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறாது.

ப்ரோமோ விடியோ வெளியாகவுள்ள இத்தருணத்தில், அதைப் பற்றிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. சிம்புவின் தோற்றம், படத்தின் களம் மற்றும் வெற்றிமாறன் உருவாக்கவிருக்கும் உலகம் ஆகியவற்றைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். இந்த விடியோ தற்போது வெளியாகி இணைய ரசிகர்களை ஈர்த்துள்ளது.

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் வரவேற்பு பெற்ற சினிமாட்டிக் உலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த பாகமான 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படம் இந்தியா முழுவதும் டிசம்பர் 19, 2025 அன்று ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் வெளியாகிறது.

இந்தப் படத்தின் புதிய ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பண்டோரா உலகின் காட்சிகள் பார்வையாளர்களுக்கு அட்டகாசமான சினிமா அனுபவத்தைத் தர இருக்கிறது என்பதை ட்ரெய்லர் உறுதிப்படுத்துகிறது.

இந்தப் படம் குறித்து அதிக எதிர்பார்ப்பு இருக்கும் அதே வேளையில், 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் திரையரங்குகளில் 3டியில் ஒரு வாரத்திற்கு மட்டும் வெளியாகிறது. ரசிகர்கள் அவதார் உலகிற்கு மீண்டும் செல்வதுடன் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் ட்ரெய்லரையும் பெரிய திரையில் பார்த்து ரசிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com