உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

வள்ளலாரை வணங்கிய சிம்பு

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படத்திற்கு 'அரசன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

Published On :

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படத்திற்கு 'அரசன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டரை படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தன் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தத் திரைப்படம் வட சென்னையைக் களமாகக் கொண்டு உருவாக இருக்கிறது.

இது ஒரு கேங்க்ஸ்டர் கதை. இந்தத் திரைப்படம் வடசென்னை திரைப்படத்தின் கிளைக்கதையாக இருக்கும் என்று வெற்றிமாறன் கூறியிருக்கிறார். ஏற்கெனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த 'வடசென்னை' படம் பெரியளவில் பேசப்பட்டது. இதனால், இந்தத் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பும் மிக அதிகமாக உள்ளது.

இந்தத் திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாக இருந்த சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பு நடிகர் சிலம்பரசனின் கார் வடலூரில் வள்ளலார் தோற்றுவித்த சத்தியஞான சபைக்குள் நுழைந்தது.

அதிலிருந்து இறங்கிய சிலம்பரசன் தர்மசாலை, அணையா அடுப்பு போன்றவற்றை தரிசனம் செய்தார். பின்னர் சத்தியஞான சபை வளாகத்தில் அமர்ந்து, சுமார் 1 மணி நேரம் தியானம் செய்தார். அதையடுத்து அணையா விளக்கு, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் உள்ள திருவறை, வள்ளலார் தண்ணீரைக் கொண்டு விளக்கெரியச் செய்த நற்கருங்குழி போன்ற இடங்களையும் தரிசனம் செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.