மிகவும் பிரபலமடைந்துவரும் ஹைட்ரா பேஷியல் முகத்தை 'பளிச்'சிட வைப்பதுடன் நீண்ட நாள்களுக்கு முகப் பொலிவை நிலைத்திருக்க வைக்கிறது.
இதன் சிறப்புகள் குறித்து சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் வசுந்தராவிடம் பேசியபோது:
'ஹைட்ரா பேஷியல் என்பது சருமத்தை மிருதுவாக, வறட்சியின்றி, நீர்ச் சத்துக் குறையாமல் வைத்திருக்கும்.
சருமம் மிக மென்மையாக, அழகாக, எழிலாக மாறும். முகச் சுருக்கங்கள், தேவையில்லாத மெல்லிய கோடுகளை நீக்கி, முகத் தசைகளை இறுக்கமாக வைத்திருக்க உதவும். வயதான தோற்றம் ஏற்படுவதையும் தடுக்கும்.
ஹைட்ரா பேஷியல் செய்வதற்கு பலவிதமான கருவிகளைப் பயன்படுத்துகிறோம். ஸ்கிரேபர் இயந்திரத்தின் மேலே சிறு பொத்தான்களில் ஸ்கிரேபர், அல்ட்ரா சவுன்ட், கேல்வானிக், மாஸ்க், அப்ரேஷன், கோல்ட், ஸ்பிரே உள்ளிட்ட பல பெயர்கள் அச்சிடப்பட்டிருக்கும் டேஷ் போர்டு உள்ளது.
அவற்றை எந்த அளவுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் 'ஷமோட்' வடிவங்களும் உள்ளன. இந்தக் கருவிகளை தேவைக்கேற்ப சரியான மோடில் உபயோகித்து, பேஷியல் செய்ய வேண்டும். டேஷ் போர்டுக்கு கீழே இருக்கும் பெட்டிகளில் நீர் நிரப்பப்பட்டுள்ளது.
தேவையான க்ரீம்கள் அடங்கிய கிட்டும் உள்ளது. அவரவர் சருமத்துக்கு ஏற்ற க்ரீமை முகத்தில் தடவி, தேவையான கருவியைப் பயன்படுத்தி பேஷியல் செய்யலாம். குறிப்பிட்ட இடைவெளியில் இந்த பேஷியலை செய்யும்போது, ஓராண்டில் முகத்தின் அனைத்துப் பிரச்னைகளும் நீங்கி, முகம் 'பளிச்'சென்று மாறிவிடும்.
நார்மல், ஸ்பெஷல் என இரு வகையான பேஷியல்கள் உண்டு. ஸ்பெஷல் ஹைட்ராபேஷியலில், ஸ்கிரேபர் என்ற அல்ட்ரா சோனிக் கருவியை உபயோகிக்கிறோம். சருமத்தின் மீது போடப்படும் சீரம், டோனர் போன்றவற்றை உள்வாங்கிக் கொள்ளவும், முகத் தசைகளை நிமிர்த்தவும் ஸ்கிரேபர் கருவி உதவும். பழங்கள், பெரீஸ் உள்ளிட்ட ஆர்கானிக் மாஸ்க்குகளை இதில் பயன்படுத்துகிறோம்.
பேஷியலின் முடிவில், முகமூடி போன்று இருக்கும் மாஸ்கை முகத்தில் மாட்டி பல வண்ண நிறங்களை முகத்தில் பாய்ச்சுவோம். இப்படிச் செய்யும்போது, மன இறுக்கத்தால் இறுகிக் கிடக்கும் முகத் தசைகள் தளர்ந்து, கூடுதல் புத்துணர்ச்சி கிடைக்கும். சருமத்தை முறையாகப் பராமரிக்க விரும்புபவர்கள் ஹைட்ரா ஃபேஷியல் செய்து கொள்ளலாம்.
சருமத் துவார அழுக்குகளை நீக்கும் 'சக்ஸன்':
சருமத் துவாரங்களில் அடைபட்டிருக்கும் அழுக்குகள், எண்ணெய்ப் பசை போன்றவற்றால் முகத்தில் பருக்கள், சிறு கட்டிகள் உள்ளோருக்கு 'சக்ஸன்' என்ற கருவியை முகத்தில் வைத்து லேசாக தேய்த்து வந்தால், அழுக்குகளை வெளியே கொண்டு வந்துவிடும். பின்னர், ஸ்டீம் செய்து எல்லா அழுக்குகளையும் முழுமையாக நீக்கி விடலாம்.
இறந்த செல்களை நீக்கும் ஸ்கிரேபர்:
ஸ்கிரேபரானது இறந்த செல்களை நீக்க உதவுகிறது. முகத்தில் அதிகப்படியான மங்கு (பிக்மென்டேஷன்), தழும்புகளைக் குறைக்கிறது. டீடாக்ஸ் மேற்கொண்டு தூய்மைப்படுத்துகிறது. முகப் பரு பிரச்னைகள் உள்ளவர்களுக்கு இது மிகவும் சிறந்தது.
எண்ணெய்ப் பசை அகற்றும் பீல் சொல்யூஷன்:
ஹைட்ராபேஷியலில் பயன்படுத்தப்படும் பீல் சொல்யூஷனை முகத்தில் தடவிவிட்டு சிறிது நேரம்கழித்து வேக்யூம் சக்ஸன் செய்யும்போது, சருமத்தின் அடியில் தங்கியிருக்கும் அழுக்குகளையும், 'சீபம்' எனப்படும் எண்ணெய் சுரப்பையும் அகற்றலாம்.
நச்சுகளை விரட்டும் 'கிளாஸ் டிவைஸ்':
முகத்தில் சிலருக்கு அடிக்கடி நீர் கோர்க்கும். மேக்கப்பை சரிவர நீக்காததால், அவை சருமத்துக்கு அடியில் போய் படியும். இதனால் சருமம் 'டல்' ஆகத் தோன்றும். நச்சுகளை
விரட்டுவதற்கும், தேவையற்ற துர்நீரை நீக்கவும், கிளாஸ் டிவைûஸ சருமத்தின் மீது மெதுவாகச் செலுத்தினால் போதும். தேவையற்ற அடைப்புகள் உறிஞ்சப்பட்டு, ரத்த ஓட்டம் சீராகி, புத்துணர்ச்சி கிடைக்கும். 'டல்'லடிக்கும் சருமம் மிளிரும்.
மங்கு பிரச்னையைத் தீர்க்கும் அல்ட்ரா சோனிக், கேல்வானிக்:
நெற்றி, மூக்கின் மேற்பகுதி, கன்னங்கள், வாயைச் சுற்றியுள்ள பகுதி என பல இடங்களில் கருப்புக் கருப்பாக, திட்டுத் திட்டாகப் படிந்திருக்கும் 'ஹைபர் பிக்மென்ட்டேஷன்' எனப்படும் மங்கு பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்போருக்கு பேஷியலின்போது அல்ட்ரா சோனிக், கேல்வானிக் போன்ற கருவிகளைப் பயன்படுத்துவோம்.
இதனால் மங்கு பிரச்னை படிப்படியாகக் குறையும். ஃபேஷியலின் இறுதியில் செய்யப்படும் கோல்ட் ஹேமர், மிஸ்ட் போன்றவற்றால், சருமம் மிகவும் இளமையாகவும், நீர்ச்சத்து நிரம்பியதாகவும் ஆகி விடுகிறது.
முறையான பயிற்சி பெற்றவர்களிடம் மட்டுமே செய்துகொள்ள வேண்டும். அதிக எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்களுக்கு சக்ஸன், ஸ்கிரேபர் கருவிகளை உபயோகிக்கலாம். வறண்ட சருமத்தினருக்கு கேல்வானிக் அல்ட்ரா சானிக் கருவியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இருமல், சளித் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு 'மிஸ்ட்' கொடுக்கக் கூடாது'' என்கிறார் வசுந்தரா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.