சென்னை பூங்காவிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு ரயில்கள் இயக்கம்!ஜூலையிலேயே சதி! கட்டடம் அல்லது விமானத்தின் மீது மோத திட்டம்! ப்ளைதுபை துணை விமானி வாக்குமூலம்பிளேக் தொற்றுக்கு பலியான ரஷிய ஆய்வாளர்! ஆய்வக குழாய் வெடித்து பரவியதா? அதிர்ச்சித் தகவல்பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத்தை எதிர்த்த வழக்கு வாபஸ்!திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! 2006 கேரள லஞ்ச முறைகேடு வழக்கு! துவரம் பருப்பு கொள்முதல் விலையில் கிலோவுக்கு ரூ.31 மிச்சம்! தவெக அரசு சாதனைபிரசாரத்தில் கோடிக்கணக்கில் செலவழித்ததாக தவெக மீது புகார்குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது! 10,000 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு ஈரான் எண்ணெய் வளத் துறை அமைச்சர் திடீர் ராஜிநாமா! ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருந்து அளிக்கிறார் முதல்வர் விஜய்! தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலவரம் (அக். 05) திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! சூடுபிடிக்கும் 2006 கேரள வழக்கு! விதிமீறல்: தவெக வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்தார்களா? தேர்தல் ஆணையத்தில் புகார் சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!

அப்பாவை நினைவு கூர்ந்த எஸ்.கே.

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'மதராஸி'.

Published On :

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'மதராஸி'. செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், ''நான் விழும்போது கைதந்து, எழும் போது உடன் நின்ற என் ரசிகர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். நான், 14 வருஷம் ஒரு பிளாஷ்பேக் சொல்கிறேன். அப்போது என்னை 'ஏழாம் அறிவு' பட நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க அழைத்தார்கள். ஆனால் கடைசியில் ஒரு ஹீரோவை வைத்து நிகழ்ச்சியை நடத்தி விட்டார்கள்.

அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிற வாய்ப்புக் கிடைத்திருந்தால், முருகதாஸ் முன்னாடி எதாவது செய்து பட வாய்ப்பு வாங்கி விடலாம் என நினைத்தேன். அதன் பின் அவரின் தயாரிப்பில் எனக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. தொடர்ந்து உழைத்தால் மேல வரலாம் என்று நினைத்து உழைத்து இன்றைக்கு முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ளேன்.

'கஜினி' படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் நான் அடுத்த நாள்தான் படத்தைப் பார்த்தேன். அப்பாவுக்கு 'ரமணா' படம் ரொம்பப் பிடிக்கும். அப்பா இன்றைக்கு இருந்திருந்தால் கண்டிப்பாக சந்தோஷம் அடைந்திருப்பார். இந்தப் படத்தில் ஷாருக்கான் நடிக்க வேண்டியது என்று சொன்னார்கள். அந்த இடத்தில் இப்போது நான் இருப்பது பெரிய விஷயம்.

காதல் என்பது தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்து அனிருத் காலம் வரைக்கும் இருக்கிற எவர்கிரீன். அப்படி ஒரு காதல் இந்தப் படத்திலும் இருக்கும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.