வ.கெளதமன் இயக்கி நடிக்கும் படம் "படையாண்ட மாவீரா'. காடுவெட்டி குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.
செப்டம்பர் 19-இல் படம் திரைக்கு வருகிறது. இந்தப் பட விழாவில் கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து, 'வாழ்க்கையோடு சம்பந்தம் இல்லாமல் போனதால்தான் சில படங்கள் அந்நியப்பட்டுப் போய்விட்டன என்று நான் நினைக்கிறேன்.
தொழில்நுட்பத்தால் வளர்ந்த சினிமா, தொழில்நுட்பத்தாலேயே அழிகிறது என்று நான் நினைக்கிறேன். கதையாசிரியர் என்ற ஜாதியைக் கொன்றது யார்? திரைக்கதை, வசனகர்த்தா ஆகியோரை வழித்தெடுத்தது யார்?
வெற்றிகண்ட சினிமா தோல்வி அடைவதற்குக் காரணம் தமிழர்கள் திரையரங்கிற்குச் சென்று படங்கள் பார்ப்பது குறைந்திருக்கிறது'' என ஆதங்கப்பட்டுப் பேசியிருக்கிறார்.
தனுஷின் "இட்லி கடை' படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த வாரம் சென்னையில் நடக்கிறது. வரும் அக்டோபர் முதல் தேதியன்று படம் திரைக்கு வருவதால் டப்பிங் மற்றும் இறுதிக்கட்ட பணிகள் பரபரக்கின்றன.
இப்படத்தின் தனுஷுடன் நித்யா மேனன், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி எனப் பலரும் நடித்துள்ளனர். இதுதவிர, ஹிந்தியில் "தேரே இஷ்க் மெய்ன்' என்ற படத்திலும் தனுஷ் நடித்து முடித்துள்ளார் .
"போர்த்தொழில்' இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் "டி}54'ல் நடித்து வருகிறார். இதில் தனுஷுடன் மமிதா பைஜு, கருணாஸ், ஜெயராம், கே.எஸ்.ரவிக்குமார், சுராஜ் வெஞ்சாரமூடு எனப் பலரும் நடிக்கிறார்கள்.
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் சைமா வழங்கும் விழாவில், சினிமாவில் 25 ஆண்டுகளாகப் பயணித்து வரும் த்ரிஷாவுக்கு சிறப்பு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
அப்போது நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் புகைப்படத்தைக் காட்டி, அவர் பற்றிப் பேசுமாறு த்ரிஷாவிடம் கூறப்பட்டது. அதற்கு த்ரிஷா, விஜய்யின் புகைப்படத்தைப் பார்த்து சிரித்துவிட்டு, 'அவரின் புதிய பயணத்திற்கு குட் லக்.
அவரின் கனவு எதுவாக இருந்தாலும் அது நிறைவேற வேண்டும்'' என்று விஜய்யின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு தனது எக்ஸ் வலைத்தளத்தில், "வெற்றி நடை வீர நடை வெல்லும் இவன் படை. அகவை 50-இல் வெற்றி மாறனின் புகழ் எட்டுத் திக்கும் எதிரொலிக்க பிறந்த நாள் வாழ்த்துகள்' என வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார்.
வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் படப்பிடிப்பு எதிர்நோக்கிக் காத்திருக்கும் திரைப்படம் "வாடிவாசல்'. பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களால் இப்படத்திற்கான வேலைகள் இன்னும் தொடங்கப்படாமலேயே இருக்கின்றன.
இதற்கிடையில் சிலம்பரசனை வைத்து டெஸ்ட் ஷூட் ஒன்றை நடத்தியிருக்கிறார் வெற்றிமாறன். வாடிவாசல், பெயரிடப்படாத சிம்பு படம், வடசென்னை 2 என வெற்றி மாறனின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளால் வரிசை கட்டி நிற்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.