பார்க்கவேண்டிய சொர்க்கம்!

மலேசியாவில், கெடா மாவட்டத்திலுள்ள அழகான தீவு, லங்காவி. கெடாவுக்கு மேற்கே 51கி. மீ.யில், தாய்லாந்து எல்லையை ஒட்டியுள்ளது.
பார்க்கவேண்டிய சொர்க்கம்!
Nico Trinkhaus
Published on
Updated on
1 min read

மலேசியாவில், கெடா மாவட்டத்திலுள்ள அழகான தீவு, லங்காவி. கெடாவுக்கு மேற்கே 51கி. மீ.யில், தாய்லாந்து எல்லையை ஒட்டியுள்ளது. இந்தப் பகுதியை சுல்தான்கள், ஆங்கிலேயர்கள், ஜப்பானியர்ஆண்டுள்ளனர்.

தென்னை மரங்கள், நீர்விளையாட்டுகள், அழகுக் கொஞ்சும் கடற்கரைகள், ஆடம்பர ரிசார்ட்டுகள் எனக் கண்ணைக் கவரும் விஷயங்கள் ஏராளம் உள்ளன. இங்கு சர்வதேச விமான நிலையமே இருக்கிறது என்றால், அதன் சுற்றுலாப் பெருமைகளை உணரலாம்.

இங்கு கிளிம் கர்ஸ்ட் , தயாங் புண்டிங் மார்பில் மற்றும் மசின்காங் என மூன்று பூங்காக்கள் உள்ளன. யுனெஸ்கோ இந்தத் தீவை குளோபல் ஜியோபார்க் என அங்கீகரித்துள்ளது.

லங்காவியின் பாலம் உலகின் மிக நீளமான பாலங்களில் ஒன்று. குனுஸ்மாட் சின்காங்கின் சிகரத்தில் அமைந்துள்ளது. பாலத்தில் நடந்தபடி நகரத்தைப் பார்க்க ஆனந்தமாக இருக்கும். முப்பரிமாண கலை அருங்காட்சியகம், துரியன் பெராங் நீர்வீழ்ச்சி எனப் பார்த்து ரசிக்க பலவுண்டு.

கைவினைப் பொருள்களை விற்பதற்கென்றே தனிக் கிராமம் உள்ளது. அங்கு கைப்பைகள், பர்ஸ்கள் எனப் பல வகையான கைவினைப்பொருட்களை வாங்கலாம். டீயூட்டி ஃப்ரி கடைகள் நிறைய உள்ளன.

மூன்றில் இரண்டு பங்கு காடுகள் மற்றும் மலைகளைக் கொண்ட லங்காவி தீவில் வருடத்திற்கு 2400 மில்லி மீட்டர் மழை பெய்யும். கடல்வழி, வான்வழி என இரண்டு வழியாகவும் வரலாம். கோலாலம்பூர், சிங்கப்பூர், பினாங்கிலிருந்தும் எளிதில் வரலாம். பார்க்கவேண்டிய சொர்க்கம்.

1980-இல்தான் சுற்றுலா துவங்கியது. பல மில்லியன் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். சுற்றுலா செல்ல மிகச்சிறந்த நேரம் டிசம்பர்-பிப்ரவரி. அப்போது கூட்டம் அதிகம் காணப்படும்.

மற்றபடி ஆகஸ்டு வரை செல்லலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com