ஜெர்மனியில் குடியேறிய தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரசாத் லோகேஸ்வரன், தமிழ் சினிமா மீதான தனது ஆர்வத்தைத் தொடர முடிவு செய்துள்ளார். ஜெர்மனியில் நடிப்பு, சண்டை மற்றும் டப்பிங் உள்ளிட்டவைகளில் தொழில்முறை பயிற்சி பெற்ற பிரசாத், ஏராளமான நாடகங்களிலும் நடித்துள்ளார்.
இருப்பினும், அவரது கனவு எப்போதும் தமிழ் படங்களில் நடிப்பதுதான். இது குறித்து அவர் பேசும் போது, ''என் தந்தை எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவர் எனக்கு எம்.ஜி.ஆரின் படங்களை அறிமுகப்படுத்தினார். இது தமிழ் சினிமா மீது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது.
இப்போது 'ரத்தமாரே' படத்தில் கதாநாயகர்களில், ஒருவராக நடிக்கிறேன். சமீபத்தில் 'ரத்தமாரே' படக்குழுவினரை ரஜினிகாந்த் ஆசிர்வதித்தார். ரஜினியை சந்தித்தது மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. அவரது ஆசிர்வாதம் கிடைத்தது பெரும் பாக்கியம். எல்லாவற்றுக்கும் நிகரானது'' என்றார்.
பிரசாத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் 'ரத்தமாரே' படத்தின் தலைப்பை விஜய் சேதுபதி வெளியிட்டார். தற்போது நடிப்புப் பயிற்சி பெற்று வரும் பிரசாத், ஜெர்மன் மொழி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
பல வெளிநாடுவாழ் இந்தியர்களைப் போல் இல்லாமல், தனது பாரம்பரியத்துடன் மீண்டும் இணைய இந்தியாவில் குடியேற விரும்புகிறார். 'ரத்தமாரே' படப்பிடிப்பை முடித்து வெளியீட்டிற்குத் தயாராகி வரும் நிலையில், பிரசாத் புதியதாக சில கதைகளையும் கேட்டு வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.