ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்து வரும் படம் 'தீயவர் குலை நடுங்க'. அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, வேல.
ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் தினேஷ் லெட்சுமணன். 'தீயவர் குலை நடுங்க' திரைப்படத்தின் அதிரடி டீசர் சமீபத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்.
சட்டத்தைத் தாண்டி நியாயம் இருக்கும் நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும். ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் என்பதை மையப்படுத்தும் இந்த க்ரைம் த்ரில்லர் டீசர், அர்ஜூனின் ஆக்ஷனையும் ஐஸ்வர்யா ராஜேஷின் மர்மமான பாத்திரத்தையும் அழகாக வெளிப்படுத்துகிறது. ஒரு விசாரணையை பரபர காட்சிகளுடன், விறுவிறுப்பாகக் காட்டி, படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.
இந்த டீசர் இணையம் முழுக்க ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார்.
படத்தொகுப்பு பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை அருண்சங்கர் துரை கவனிக்கிறார். விரைவில் இப்படத்தின் இசை, ட்ரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் படம் திரைக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.