முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

ரெக்கைக் கட்டிப் பறக்கும் சைக்கிள்...

கிராமப்புறங்களில் அத்தியாவசியப் போக்குவரத்துச் சாதனமாக இன்றும் சைக்கிள் விளங்கிவருகிறது.

Published On :

கிராமப்புறங்களில் அத்தியாவசியப் போக்குவரத்துச் சாதனமாக இன்றும் சைக்கிள் விளங்கிவருகிறது. கர்நாடகத்தில் விஜயபுரா, பாகல்கோட் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போருக்கு சைக்கிள் ஓட்டுவது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இதற்காக, விஜயபுராவின் புறநகர் புட்னால் கிராமத்தில் ரூ.10 கோடியில் உலகத் தரம் வாய்ந்த 'வேலோட்ரோம்' சாலை அமைக்கப்பட்டுள்ளது. சைக்கிள் போட்டிகளில் பங்கு பெறுபவர்கள் இந்தச் சாலைகளைப் பயன்படுத்தி தங்கள் திறனை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

இந்தப் பகுதியில் சைக்கிள் ஓட்டும் பாரம்பர்யம்

17-ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. மும்பை மாகாணத்தின் கீழ் பல சமஸ்தானங்கள் இந்தப் பகுதியை ஆட்சிபுரிந்துள்ளன.

ஆட்சியாளர்கள் வருடாந்திரக் கண்காட்சியையும், தசரா போன்ற பண்டிகைகளின்போது சமஸ்தானங்களுக்கு இடையேயான போட்டிகளையும் ஏற்பாடு செய்வதன் மூலம் சைக்கிள் ஓட்டுதல் உட்பட பல விளையாட்டுகளை ஊக்குவித்தனர்.

கிராமங்கள் முழுவதற்கும் செய்திகளை அனுப்ப அரச குடும்பத்தினரும் சைக்கிள்களையே பயன்படுத்தினர். இந்த ஊரிலேயே சைக்கிள் போட்டியில் தேசிய அளவில் தங்கப் பதக்கம் பெற்றவர்களும் இருக்கின்றனர்.

இந்தப் பகுதியில் மேம்பட்ட சைக்கிள்களை ஆங்கிலேயே அரசு அறிமுகப்படுத்தி, சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு காலணிகள், தலைக்கவசங்களை வழங்கியது. அல்மாட்டி அணை கட்டப்பட்டதினால் பலருக்கு சைக்கிளே போக்குவரத்து வசதியானது. இந்தச் சூழலில் சந்துரு குரானி, ராஜேசாப் அத்தார் போன்ற திறமையான சைக்கிள் ஓட்டுநர்கள் கிடைத்தனர்.

ஜம்கண்டியில் உள்ள கும்பரஹல்லா கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் சைக்கிள் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.