அழிந்து வரும் நிலையில் உள்ள அரிய விலங்குகள், தாவரங்களை அவற்றின் இயற்கையான இடத்திலேயே பாதுகாக்க 573 வனவிலங்கு சரணாலயங்கள் நாட்டில் உள்ளன.
இங்கு வேட்டையாடுதலுக்கும், மரம் வெட்டுதலுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மத்திய பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள மாதவ் தேசிய பூங்கா அண்மையில்தான் உருவாக்கப்பட்டது. 58 புலிகள் சரணாலயங்களில், மத்திய பிரதேசத்தில் மட்டும் 9 உள்ளன.
14 மாநிலங்களில் 33 யானைகள் காப்பகங்கள் உள்ளன. மிக அதிக யானை வழிப்பாதைகளைக் கொண்ட மாநிலமான மேற்கு வங்கத்தில் மொத்த யானைப் பாதைகளில் 17 சதவீதம் உள்ளது. ஒடிஸ்ஸாவில் 14 யானைப் பாதைகள் உள்ளன.
கர்நாடகத்தில்தான் மிக அதிக எண்ணிக்கையில் 6,013 யானைகள் உள்ளன. அடுத்து அஸ்ஸாமில் 4,159, தமிழ்நாட்டில் 3,136 யானைகள் உள்ளன. பந்திப்பூர் தேசிய பூங்கா யானைகளுக்கு மிகவும் பிரபலம். நாட்டில் தேசிய பூங்காவே இல்லாத ஒரே மாநிலம் பஞ்சாப்.
நாட்டில் உள்ள பிரபலமான ஐந்து யானைகளுக்கான சிறந்த தேசிய பூங்காக்களில் இரண்டு தமிழ்நாட்டில் உள்ளன.
நீலகிரி உயிர்க்கோள் காப்பகம்:
நாட்டின் முதல் அங்கீகாரம் பெற்ற பல்லுயிர் பாதுகாப்பகம். தமிழ்நாடு, கேரளம், கர்நாடக மாநிலங்கள் சந்திக்கும் இடத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் 5 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவுடன் உள்ளது. ஆசிய யானைகள், வங்கப் புலிகள் உள்ளிட்டவை இங்குள்ளன. வழக்கமான மழைப் பொழிவே இந்தப் பகுதியை ஆண்டு முழுவதும் வளமாக வைத்துள்ளது. இங்கு யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெறுகிறது.
நாகர் ஹோளே தேசிய பூங்கா, பந்திப்பூர் வனவிலங்கு சரணாலயம்: 'துப' என்ற இடத்தில் யானைகள் முகாம் நடக்கும். அடர்ந்த வனப்பகுதிகள், பாம்புகள்போல் வளைந்து செல்லும் நதிகள் என இயற்கையான சூழல் இங்குள்ளது. பந்திப்பூரில் 1,116 யானைகளும், நாகர்ஹோளேயில் 831 யானைகளும் உள்ளன.
முதுமலை தேசிய பூங்கா, நீலகிரி யானைகள் காப்பகம்:
யானைகளுக்கு முக்கிய வாழ்விடமாகவும், இடம்பெயர்வுக்கான வழித்தடமாகவும் உள்ளது. மாறுபட்ட நிலப்பரப்பு, புல்வெளி, ஆற்றங்கரை, வனப்பகுதிகள், புதர், தொலைதூரப் பறந்த காட்சிகள், திடீர் நெருக்கமான சந்திப்புகள் போன்றவை நிறைய உண்டு. தமிழ்நாட்டிலேயே இங்கு தான் மிக அதிக எண்ணிக்கையில் 325 யானைகள் உள்ளன.
சிமிலி பால் தேசிய பூங்கா, மயூர்கஞ்ச் யானைகள் சரணாலயம்:
கிழக்கு இந்தியாவில் யானைகளின் முக்கிய வாழ்விடமான இது ஒடிஸ்ஸாவில் உள்ளது. சால் வனப்பகுதிகள், நீர்வீழ்ச்சிகள், மலை உச்சிகள் வழியாக யானைக் கூட்டங்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். இங்கு 430-க்கும் அதிகமான யானைகள் உள்ளன.
காசிரங்கா தேசிய பூங்கா, கர்பி ஆங்லாங் யானைகள் சரணாலயம்:
பிரம்மபுத்ராவின் வெள்ளப் பெருக்கு சமவெளிக்குள் அமைந்துள்ளது. குறிப்பிட்ட பருவங்களில் உயரமான இடத்திலிருந்து யானைகள் இடம் பெயர்ந்து வரும். இவை சுற்றுலாப் பயணிகளுக்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இங்கு 1,920 யானைகளுக்கும் மேல் உள்ளன. ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களுக்கும் பிரபலம். புலிகள், நீர் எருமைகளும் அதிகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உயர்கல்விக்கும் முன்னுரிமை

திருமுக்குளம் சிறுவா் பூங்காவை செயல்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்
இலங்கையின் அழகு..!
உயரமான ரயில் நிலையம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


