

'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் இணையும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட்' பேனரின் கீழ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு 'பாக்கெட் நாவல்' எனப் பெயரிட்டிருக்கிறார்.
'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி, 'பாக்கெட் நாவல்' படத்திலும் இணைந்திருக்கிறார்.
இவருடன் ராஜ் பி ஷெட்டி, மாளவிகா மோகனன், கிஷோர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு 'இசைஞானி' இளையராஜா இசையமைக்கிறார்.
எஸ்.கே. தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'தாய் கிழவி' படத்தை இயக்கி இருப்பவர் சிவகுமார் முருகேசன். அப்படம் இம்மாதம் திரைக்கு வருகிறது. அதுமட்டுமல்ல, கடந்தாண்டு வெளிவந்த 'ஆண்பாவம் பொல்லாதது' படத்தின் கதாசிரியரும் இவர்தான்.
தற்போது இவர் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது. படத்திற்கு 'சேயோன்' எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள்.
சிவகுமார் முருகேசன் இயக்கும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. 'அமரன்' பட வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் இந்தப் படத்தை தயாரிப்பதாக முடிவெடுத்திருக்கிறது ராஜ்கமல் நிறுவனம்.
ஷனாயா கபூர் மற்றும் ஆதர்ஷ் கெளரவ் நடித்த சர்வைவல் த்ரில்லர் திரைப்படமான 'து யா மெயின்' சமீபத்தில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. பரபரப்பான மற்றும் அதன் சஸ்பென்ஸ் நிறைந்த கதைக்களம் காரணமாக ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் இந்தப் படம் சிறந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
தென்னிந்தியாவில் நடைபெற்ற இந்தப் படத்துக்கான சிறப்பு திரையிடல் நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குநர் மணிரத்னம் படத்தை பெரிதும் பாராட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.