ஆன்மிகச் சொற்பொழிவாளர், பக்திப் பாடலாசிரியர், ஆன்மிக இசைப்பாடகர் உள்ளிட்ட பன்முகத் திறமைகளைக் கொண்டவர் மதுரகவி பிரம்மஸ்ரீ குமார் சாஸ்திரிகள். ஆன்மிகமும், இலக்கியமும் தழைத்திடும் மதுராந்தகம் நகரில் பிறந்த இவர், எழுபத்து மூன்று வயதிலும் மேடையேறி அமர்ந்த மறுகணம் தமது கணீரென்று சுண்டியிழுக்கும் குரலில் பாடத் தொடங்குகிறார். ஐம்பது ஆண்டுகளாகச் சொற்பொழிவாற்றும் இவர், பேசத் தொடங்கியதும் கூட்டத்தினரின் கவனம் முழுவதும் இவர் மீதே படிந்து விடுகிறது.
1970, 80-களில் மதுராந்தகம் ஸ்ரீஏரிகாத்த ராமர் கோயில், வடதிருச்சிற்றம்பலம் ஸ்ரீமுருகர் கோயில்களில் இசைக்கச்சேரி நிகழ்த்த அவ்வப்பொழுது வருகை தந்த மதுரை சோமு, சீர்காழி கோவிந்த
ராஜன் போன்ற இசையுலக ஜாம்பவான்கள், இவர் இயற்றிய பக்திப்பாடல்களுக்கு உடனடியாக மெட்டமைத்துப் பாடி, ரசிகர்களை அசத்தியுள்ளனர்.
1982- ஆம் ஆண்டில் நெமிலி பாலா திரிபுரசுந்தரி பீடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இவருக்கு 'மதுரகவி' என்ற பட்டத்தை கவிஞர் நெமிலி எழில்மணி வழங்கினார்.
காஞ்சி ஸ்ரீசங்கரமடத்தில் பரமாச்சாரியாரை தரிசனம் செய்ய குமார் சாஸ்திரிகள் சென்றபோது, அவர் எதிர்பாராதவிதமாக, 'உனக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டார்.
'தங்களுடைய நல்லாசிகளால் நான் மேன்மேலும் ஆன்மிகப் பாடல்களை எழுத வேண்டும்' என்று வேண்டிக் கொண்டவரை ஆசிர்வதித்தார் பரமாச்சாரியார்.
அடுத்த சில வாரங்களில் பிரபல இசை வெளியீட்டாளர்களான எச்.எம்.வி. நிறுவனத்திடமிருந்து இவருக்கு அழைப்பு வர, ஸ்ரீமகாபெரியவரைப் பற்றி இவர் எழுதிய பாடல்கள் இரண்டு சீர்காழி சிவசிதம்பரத்தால் பாடப்பட்ட ஒலிநாடாவில் சேர்க்கப்பட்டன. பத்துப் பாடல்கள் அடங்கிய அந்த ஒலிநாடா 1992 டிசம்பரில் வெளியாகி, விற்பனையில் சாதனை புரிந்தது.
பகவான் ஸ்ரீரமணரின் நினைவாக, 2004-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற ஸ்ரீரமண ரத யாத்திரையை மதுராந்தகத்தில் இவர் வரவேற்றார். அப்போது மிகக் குறுகிய காலத்தில் இவரால் பயிற்சி அளிக்கப்பட்ட அறுபது பள்ளிக்
குழந்தைகள் பகவான் ஸ்ரீரமணரால் இயற்றப்பட்ட 'அக்ஷரமணமாலை' என்ற துதியை ஓதியபடி முன்னே செல்ல, ஸ்ரீரமணரதம் மதுராந்தகம் நகர எல்லையிலிருந்து ஸ்ரீதிருவெண்காட்டீஸ்வரர் கோயிலைச் சென்றடைந்தது.
பதினைந்து ஆண்டுகளாக, சென்னை குரோம்பேட்டை குமரன் குன்றத்தில் பல தொடர்சொற்பொழிவுகளை நிகழ்த்திவரும் குமார் சாஸ்திரிகளுக்கு 2026-ஆம் ஆண்டு பிப். 10-இல் பாராட்டுவிழா நடத்தப்பட்டது.
ஸ்ரீதிருவெண்காட்டீஸ்வரர் கோயிலில் இவரும், இவருடைய சிஷ்யர்களும் இன்றும் திங்கள்தோறும் அக்ஷரமணமாலையையும், வெள்ளிக்கிழமைதோறும் அபிராமி அந்தாதியையும் ஓதிவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்

அவிநாசி கோயில் தோ்த் திருவிழாவில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் ரத்து: இந்து முன்னணி கண்டனம்
எஸ். பாலசுப்பிரமணியம் - நான் சந்தித்த பிரபலங்கள் - 52
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

