நெகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷின் திரைப்பயணத்தில் நடிகையர் திலகம் (மகாநடி) திரைப்படம் இன்றளவும் மிக முக்கியமான திரைப்படமாக உள்ளது.
கீர்த்தி சுரேஷின் திரைப்பயணத்தில் நடிகையர் திலகம் (மகாநடி) திரைப்படம் இன்றளவும் மிக முக்கியமான திரைப்படமாக உள்ளது. அந்த வரிசையில் அவர் நடித்திருக்கும் 'டோரதி' திரைப்படமும் இணைந்துள்ளது. விவாதத்துக்குரிய விஷயத்தை படமாக்கி, அதை வணிக ரீதியாகவும் வெற்றி பெறச் செய்வது மிகவும் கடினம். ஆனால், கார்த்திக் சுப்புராஜ் தனது எழுத்தின் மூலம் அதைச் சாத்தியமாக்கியுள்ளார்.
'படத்தில் என் கதாபாத்திரம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. அந்தக் கதாபாத்திரத்தில் பல அடுக்குகள் இருப்பதை என்னால் உணர முடிந்தது. சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி இயக்குநர் உணர்வுபூர்வமாக இந்தக் கதையில் பேசியுள்ளார்.பெண்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படையாகப் பேசுவதற்குத் தடையாக இருக்கும் ஆணாதிக்கம், சமத்துவத்துக்கான அவர்களின் மனவேதனை, தங்களது கருத்துகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான உரிமை ஆகிய அனைத்தும் உணர்வு
பூர்வமாகப் படமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, புறச்சூழல் அழுத்தம் காரணமாகத் திருமண வாழ்க்கைக்குள் நுழையும் பெண்கள் அனுபவிக்கும் வலியும் இப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது' என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

