"தம்பிரான் வணக்கம்'

1578-இல் கொல்லத்தில் ஓர் அச்சகம் அமைக்கப்பட்டது. அங்கு தமிழில் வெளியான முதல் நூல் "தம்பிரான் வணக்கம்' மீண்டும் அச்சிடப்பட்டது. இதற்கான தமிழ் எழுத்துகளை "சான்பரியா' என்னும் தந்தை மீண்டும் வார்த்தார். "
"தம்பிரான் வணக்கம்'

1578-இல் கொல்லத்தில் ஓர் அச்சகம் அமைக்கப்பட்டது. அங்கு தமிழில் வெளியான முதல் நூல் "தம்பிரான் வணக்கம்' மீண்டும் அச்சிடப்பட்டது. இதற்கான தமிழ் எழுத்துகளை "சான்பரியா' என்னும் தந்தை மீண்டும் வார்த்தார். ""தந்தை பரியா தமிழ் எழுத்துகளை செதுக்கி வார்த்தார்'' என்று 1582-லேயே தந்தை சூசா என்பவர் எழுதி வைத்திருக்கிறார்.

 கொல்லத்தில் அச்சிடப்பட்ட நூலின் கடைசிப் பக்கத்தில் (பக்-16) அந்நூலில்  பயன்படுத்திய எழுத்துகளின் அடங்கல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 1577-இல் கோவாவில் வார்க்கப்பட்ட எழுத்துகள் "கோவையில் உண்டான எழுத்து' என்னும் தலைப்பின் கீழ் அகர வரிசையில் ஏழு வரிகளில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அதன்கீழ் 1578-இல் "கொல்லத்தில் உண்டாக்கின எழுத்து' என்னும் தலைப்புடன் 12 வரிகளில் கொல்லத்தில் வார்க்கப்பட்ட எழுத்துகள் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இது புது முயற்சி என்பதால் இவ்விதம் பட்டியல் கொடுக்கப்பட்டது என்று எடுத்துக்கொள்ளலாம்.

"அச்சுக்கலை' ஆசிரியர் மா.சு.சம்பந்தம் என்பவர், ""கோவாவிலும் கொல்லத்திலும் தமிழ் அச்சு எழுத்துகள் உலோகத்தில் வார்க்கப்பட்டன'' என்று கூறியுள்ளார். அச்சக வரலாற்று ஆசிரியர் பி.எஸ்.கேசவனும் இதை உறுதிப்படுத்துகிறார். "தம்பிரான் வணக்கம்' என்ற நூலை மீண்டும் அச்சிட்டு வெளியிட்டுள்ள அருள் தந்தை பேராசிரியர் க.இராசமாணிக்கம், ""1577-லேயே தமிழுக்கு அச்செழுத்துகள் வந்துவிட்டன. அவை உலோகத்தால் ஆனவை'' என்று முன்னுரையில் தெரிவித்துள்ளார்.

புன்னைக்காயல்:

அண்டிரிக் பாதிரியார் என்பவர், 1578-இல் புன்னைக்காயலுக்கு வந்தார். (தூத்துக்குடியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது புன்னைக்காயல்) அங்கு அச்சகம் அமைத்தார். 1578-இல் "தம்பிரான் வணக்கம்' மீண்டும் அச்சாயிற்று. புன்னைக்காயலில் அச்சகம் அமைக்க மீனவர்கள் 400 பணம் கொடுத்தார்கள். அதனால், அங்கு அச்சான "தம்பிரான் வணக்கம்' நூல், எல்லோருக்கும் இலவசமாகக் கொடுக்கப்பட்டது.

இதுபற்றி அந்நூலில் கீழ்வருமாறு குறிக்கப்பட்டிருக்கிறது:

""தமிழ்மொழி அச்சு கண்டதால் தமிழ் இனத்தாருக்கு உலகிலேயே பெரும் புகழ் உண்டாகிறது. முதல் செலவழித்து உண்டாக்கு வித்ததனாலே சங்கையும் கீர்த்தியும் உலோக முன்பாகப் பெற்றீர்கள். பல பல பொத்தகங்கள் அச்சிலே உண்டாக்க வேணுமென்று முதல் அச்சு உண்டாக்க செலவழித்தீர்களே ஆகையினால் இந்தப் பொத்தகம் உங்களுக்கு நன்கொடையா வரவிட்டோம்''

தமிழ் எழுதப்படிக்கக் கற்றுக்கொண்ட முதல் ஐரோப்பியர், அண்டிரிக் பாதிரியார்தான். இவர் ஐரோப்பியருக்குத் தமிழ் கற்றுக்கொடுக்கப் புன்னைக்காயலில் பள்ளி ஒன்று நடத்தினார். தமிழ் இலக்கண நூலும் தமிழ்-போர்த்துகல் அகரமுதலியும் எழுதினார். (இந்த இரு நூல்களும் அச்சேரவில்லை) இவரே "தமிழ் அச்சுத் தந்தை' என்று அழைக்கப்பட்டார். மொழிபெயர்ப்புக்கும் இவரே முதல்வர். 54 ஆண்டுப் பணிகளுக்குப் பிறகு காலமானார். தூத்துக்குடி பனிமாதா கோயிலில் அடக்கம் செய்யப்பட்டார்.

(படம்-2) 1578-இல் கொல்லத்தில் அச்சான தம்பிரான் வணக்கம் நூலின் கடைசிப் பக்கத்தில் அந்நூலில் பயன்படுத்திய எழுத்துகளின் அடங்கல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதுதான் இது. 1577-இல் கோவாவில் வார்க்கப்பட்ட எழுத்துகள் "கோவையில் உண்டாக்கின எழுத்து' என்னும் தலைப்பின் கீழ் அகர வரிசையில் ஏழு வரிகளில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் கீழ் 1578-இல் "கொல்லத்தில் உண்டாக்கின எழுத்து' என்னும் தலைப்பின் கீழ் 12 வரிகளில் கொல்லத்தில் வார்த்த எழுத்துகள் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. கோவாவில் உண்டாக்கின எழுத்துகளில் "ஈ' என்பது "கீ' போன்று மேற்கொம்பு சுழிக்கப்பட்டு இருப்பதைக் காண்க (படம் 2).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com