பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

ஒளி பொருந்திய கண்ணை உடையாய்!  வெள்ளம் வருகின்ற காலத்தில் ஈரம் பொருந்திய மணலைப் போல,  வஞ்சனையான எண்ணம் உடையாரை,  மனத்தை முகங் காட்டுதலின் அதனைக்கொண்டே அறிந்து கொள்ளலாம்.  
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

வெள்ளம் வருங்காலை ஈரம்பட் டஃதேபோல்
கள்ள முடையாரைக் கண்டே அறியலாம்
ஒள்ளமர் கண்ணாய்! ஒளிப்பினும் உள்ளம்
படர்ந்ததே கூறும், முகம். (பாடல்-41)
 

ஒளி பொருந்திய கண்ணை உடையாய்!  வெள்ளம் வருகின்ற காலத்தில் ஈரம் பொருந்திய மணலைப் போல,  வஞ்சனையான எண்ணம் உடையாரை,  மனத்தை முகங் காட்டுதலின் அதனைக்கொண்டே அறிந்து கொள்ளலாம்.  தங்கருத்தை வெளித்தோன்றாமல் ஒருவர் மறைப்பினும், முகமானது அவர் மனத்தில் உள்ளதையே வெளிப்படுக்குமாகலான். (க}து.)மறைப்பினும் உள்ளத்தில் உள்ளவாறே முகம்காட்டு மென்பதாம். "உள்ளம் படர்ந்ததே கூறும்முகம்' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com