கொடுத்தவனை இகழாதே!

தம்முடைய சுற்றத்தானென்று கருதி இருநாழி அரிசியைக் கொடுத்தவன் வெகுளினும் வெகுள்வதன்றி, சுற்றத்தான் என்பது கருதி அவன் என்றும், இவன் என்றும் இகழ்ந்து கூறி
 கொடுத்தவனை இகழாதே!

பழமொழி நானூறு
தமனென் றிருநாழி ஈத்தவ னல்லால்
 நமனென்று காயினும் தான்காயான் மன்னே
 அவனிவ னென்றுரைத் தெள்ளிமற் றியாரே
 நமநெய்யை நக்கு பவர். (பாடல்-35)
 தம்முடைய சுற்றத்தானென்று கருதி இருநாழி அரிசியைக் கொடுத்தவன் வெகுளினும் வெகுள்வதன்றி, சுற்றத்தான் என்பது கருதி அவன் என்றும், இவன் என்றும் இகழ்ந்து கூறி நகையாடி, நன்றியறிதலுடையான் மனவெறுப்புக் கொள்ளான். மந்திரங் கூறிக் குண்டத்திலிட வைத்த ஆனெய்யை நக்கிச் சுவை பார்ப்பார் யாவர்? (ஒருவருமிலர்.) (க-து.) ஒருவன் தனக்கு உதவி செய்தவன் காய்வானாயினும் தான் காய்தலை யொழிக என்றது இது. "யாரே நமநெய்யை நக்குபவர்' என்பது பழமொழி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com