அன்புள்ள ஆசிரியருக்கு

"நற்றிணை உணர்த்தும் நங்கையர் மாண்பு!' (7.10.18) கட்டுரையைப் படித்து மகிழ்ந்தேன். காதல் திருமணம் செய்துகொண்ட பெண்ணை,

இலக்கியக் காதல்
 "நற்றிணை உணர்த்தும் நங்கையர் மாண்பு!' (7.10.18) கட்டுரையைப் படித்து மகிழ்ந்தேன். காதல் திருமணம் செய்துகொண்ட பெண்ணை, தாய் தன் வீட்டிற்கு அழைக்க; அவளோ, "பசியால் வாடினாலும் பழிப்பில்லாமல் வாழ்கின்றேன்; பாலை மட்டும் ஊட்டி வளர்க்காமல் பண்பாட்டையும் சேர்த்து வளர்த்த உங்கள் மகளல்லவா?' என்று கூறும் இலக்கியக் காதலின் இனிமையை உணர்த்திய விதம்
 அற்புதம்!
 எஸ். பரமசிவம், மதுரை.
 
"தமிழ்மணி'யில் வெளிவருகின்ற கலாரசிகனின் எண்ண அலைகளும், கட்டுரைகளும் தமிழ் விருந்தாக அமைந்து மகிழ்ச்சி தருகிறது. "நற்றிணை உணர்த்தும் நங்கையர் மாண்பு!' கட்டுரையில், கணவனின் வருவாய்க்குள் வாழ்வதுதான் காதல் மனைவியின் கடமை என்பதை மிக அழகாக விளக்கிய கட்டுரையாளருக்குப் பாராட்டுகள்.
 என். சண்முகம், திருவண்ணாமலை.
 
 "தமிழ்மணி'யைப் படிக்கும்போது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு படித்த பள்ளியின் வகுப்பறைக்கே சென்று விடுகிறேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் என் பள்ளிப் படிப்பு தொடர்கிறது. கலாரசிகன் கலந்துகொண்ட "ஆத்தூர் பாரதி-மகாத்மா பண்பாட்டு அறக்கட்டளை'யின் இலட்சினையே சிறப்பாக இருந்தது."மகாத்மா
 காந்தியினுள் மகாகவி பாரதி அடக்கம்' என்னும் பொருள் அதில் பொதிந்திருந்தது.
 எஸ்.வேணுகோபால், சென்னை.
 
 "ஈன்றோள் நீத்த குழவி' எனும் கட்டுரையில், "வீழ்குடி உழவன்' என்ற சொல்லாட்சியை அரிசில்கிழார் பயன்படுத்திய பாங்கைக் கட்டுரையாளர் எடுத்துக்காட்டிய பாங்கு இலக்கியவாதிகள் நினைவுபடுத்திக் கொள்ளும் வகையில் அமைந்திருந்தது. விளக்கம் மிக நன்று.
 இராம.வேதநாயகம், வடமாதிமங்கலம்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com