பழமொழி நானூறு

பழமொழி நானூறு

முன்னொரு காலத்தில் "நாந்தகம்' என்னும் வாளினை உடைய மிக்க திறல் பொருந்திய திருமாலைக் கொல்லும் பொருட்டுச் சென்ற மது கைடவர் என்போர்,

உருவப் பொலிவு!
 வாட்டிற லானை வளைத்தார்கள் அஞ்ஞான்று
 வீட்டிய சென்றார் விளங்கொனி - காட்டப்
 பொருவறு தன்மைகண் டஃதொழிந்தார் அஃதால்
 உருவு திருவூட்டு மாறு. (பா.106)
 முன்னொரு காலத்தில் "நாந்தகம்' என்னும் வாளினை உடைய மிக்க திறல் பொருந்திய திருமாலைக் கொல்லும் பொருட்டுச் சென்ற மது கைடவர் என்போர், வளைந்து சூழ்ந்தார்களாகி, நிலைபெற்று விளங்குகின்ற தனது திருமேனியின் ஒளியைக்காட்ட, ஒப்பில்லாத வடிவின் தன்மையைக் கண்டு தாங்கொண்ட மாறுபாட்டினின்றும் நீங்கினார்கள். அழகிய வடிவே செல்வத்தை ஊட்டும் நெறி; அதுவன்றோ? (க-து.) உருவப் பொலிவால் பகைவர் வயமாவர் என்றது இது. "உருவு திருவூட்டு மாறு' என்பது பழமொழி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com