வேற்றுமையில் ஒற்றுமை!

"வேற்றுமையில் ஒற்றுமை' (மய்ண்ற்ஹ் ண்ய் ஈண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்) என்பது இந்தியத் திருநாட்டின் தனித்தன்மை; இந்தியத் திருநாட்டின் சிறப்பியல்பு. இச்சிறப்பியல்பு இலக்கியங்களிலும் உண்டு.
வேற்றுமையில் ஒற்றுமை!

"வேற்றுமையில் ஒற்றுமை' (மய்ண்ற்ஹ் ண்ய் ஈண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்) என்பது இந்தியத் திருநாட்டின் தனித்தன்மை; இந்தியத் திருநாட்டின் சிறப்பியல்பு. இச்சிறப்பியல்பு இலக்கியங்களிலும் உண்டு. மொழிகள் வேறுபடலாம்; ஆயினும், வேறுபட்ட மொழிகளில் தோன்றிய வெவ்வேறு இலக்கியங்களுக்கிடையே எத்தனையோ ஒற்றுமைக் கூறுகளைக் காணமுடிகின்றது. அவ்வகையில், கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பட்டினப்பாலையின் சில அடிகளும், சஃபோ  (நஹல்ல்ட்ர்) என்கிற கிரேக்கக் கவிஞரின் பாடலடிகளும் பெற்றுள்ள ஒற்றுமை நயம் நம் உள்ளத்தை மகிழ்விக்கிறது.

பட்டினப்பாலையில், பாலைத்திணைக்குரிய "செலவழுங்குதல்' எனும் துறையில் அமைந்த இப்பாட்டு, கரிகால் பெருவளத்தானின் சிறப்பினைப் பாடுகின்றது. காவிரிப்பூம்பட்டினச் சிறப்பை ஆசிரியர் அற்புதமாக எடுத்துரைக்கிறார். அங்கு, "வான்  பொய்ப்பினும் தான் பொய்யாக்' காவிரி உண்டு; கழனி வளம் உண்டு; இயற்கை நலம் உண்டு; வணிகச் சிறப்பு உண்டு. "சோறு ஆக்கிய கொழுங்கஞ்சி ஆறுபோல' வழிந்தோடும். 

அந்நகரின் சிறப்பு சொல்லில் அடங்குமோ? தட்டுப்பாடின்றி எப்பொருளும் கிடைக்கும் சிறப்புடைய காவிரிப்பூம்பட்டினமே கிடைப்பதாக இருந்தாலும் என் தலைவியைப் பிரிந்து செல்லேன் எனத் தன் நெஞ்சுக்குக் கூறுகிறான் தலைவன்.

""முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய
வாரேன் வாழிய நெஞ்சே''         (218-220)


கிரேக்கக் கவிஞர் குழந்தைச் செல்வத்தைப் பற்றிப் பாடுகிறார். லெஸ்பாஸ் (கங்ள்க்ஷர்ள்) என்பது கிரேக்கப் பெருநகரங்களுள் ஒன்று. இந்நகரம் சீரும் சிறப்புமிக்க நகரம்; செல்வச் செழிப்புமிக்க நகரம். 
""இந்நகரமே கிடைப்பதாக இருந்தாலும், தான் பெற்ற மழலைச் செல்வத்தை - அந்த அழகுப் 
பெட்டகத்தை - அந்தத் தங்க மலரைப் பிறருக்குத் தருவதற்கு சம்மதிக்க மாட்டேன்'' எனப் பாடுகிறார் கவிஞர்.

The golden flower
For whom I won't exchange
All the lovely Lesbos

என்பன அவரது கவிதை வரிகள். நம் சங்கத் தமிழ்ப் புலவர் அன்பிற்குரிய காதலியைப் பிரிய ஒருப்படேன் என்கிறார்; கிரேக்கக் கவிஞரோ பாசத்திற்குரிய மழலையைப் பிரிய ஒருப்படேன் என்கிறார். என்னே ஒரு கருத்தொற்றுமை! என்னே ஓர் உணர்வொற்றுமை! அதிலும் இருவருமே அவரவர் நாட்டில் உள்ள சிறப்பிற்குரிய நகரமே கிடைப்பதாக இருந்தாலும் நேசத்திற்குரியவரைப் பிரியும் செயலுக்கு இசைய மாட்டோம் என்று கூறியிருப்பது எண்ணத்தக்கது.

இடம், மொழி, மதம், இனம் வேறுபடலாம். ஆனால், இதயம் ஒன்றுதான்; அந்த இதயத்தில் எழும் உணர்வு ஒன்றுதான். பட்டினப்பாலையும், கிரேக்கக் கவிஞர் பாடலும் முறையே காதல் நேசத்தையும், குழந்தைப் பாசத்தையும் பேசுகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com