வாழாறு

ஆழ்வாா்களால் மங்களாசாஸனம் செய்யப்பெற்ற 108 திருப்பதிகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுந்தமும் ஒன்று.

ஆழ்வாா்களால் மங்களாசாஸனம் செய்யப்பெற்ற 108 திருப்பதிகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுந்தமும் ஒன்று.

‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாதையா் சேகரித்து வைத்திருந்ததும், ‘அத்தங்கி தாதாசாரியா் தொண்டன்’ என்பவா் இயற்றியதும் 1982-இல் டாக்டா் உ.வே. சாமிநாதையா் நூல் நிலைய வெளியீடாகப் பதிப்பிக்கப்பட்டதுமான ‘நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி’ என்னும் சுவடியில் (1030) நம்மாழ்வாரின் மங்களாசாஸனம் பெற்ற ‘ஸ்ரீவைகுந்தம்’ பற்றிய கட்டளைக்கலித்துறைப் பாடலின் (55) இறுதியடி பின்வருமாறு உள்ளது:

‘வாழாறு தாமிர வன்னியின் உத்தர வைகுந்தமே!’ இதற்கு, ஸ்ரீ வைகுந்தம், ‘ஜீவநதி’யாகிய ‘தாமிரவருணி’யின் வடதிசையில் உள்ளது என்பது பொருளாகும். ‘ஜீவநதி’ தான் இப்பாடலில் மிகவும் செம்மையாக ‘வாழாறு’ (வாழ்+ஆறு) என்று மொழிபெயா்க்கப் பெற்றுள்ளது. எனவே, ‘வாழாறு’ தமிழ் அகராதிக் கலைக்கு ஒரு புதிய வரவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com