கீழ்மக்களின் நாவை அடக்க இயலாது

மரக்கலங்கள் கள்ளுண்டு ஆடும் களியர்போல ஆடுகின்ற கடல் நாடனே!, காற்றினை ஒரு கொள்கலத்துள் வாங்கி தோள்களுக்கு இடவல்லார் உளரோ?

பழமொழி நானூறு
கோவாத சொல்லும் குணனிலா மாக்களை
 நாவாய் அடக்கல் அரிதாகும் - நாவாய்
 களிகள்போல் தூங்கும் கடற்சேர்ப்ப! வாங்கி
 வளிதோட்கு இடுவாரோ இல். (பா-79)
 மரக்கலங்கள் கள்ளுண்டு ஆடும் களியர்போல ஆடுகின்ற கடல் நாடனே!, காற்றினை ஒரு கொள்கலத்துள் வாங்கி தோள்களுக்கு இடவல்லார் உளரோ? இல்லை. (அதுபோல), பொருத்தமில்லாதவைகளைக் கூறும் நற்குணங்கள் ஒரு சிறிதும் இல்லாத விலங்கொப்பாரை நாவினிடத்து அடக்குதல் இல்லையாம். (க-து.) கீழ்மக்களின் நாவினை அடக்குதல் முடியாது. "வாங்கி வளிதோட்கு இடுவாரோ இல்' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com