பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தாயானும் தந்தையா லானும் மிக(வு)இன்றிவாயின்மீக் கூறும் அவர்களை ஏத்துதல்நோயின்(று) எனினும் அடுப்பின் கடைமுடங்கும்
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்


தாயானும் தந்தையா லானும் மிக(வு)இன்றி
வாயின்மீக் கூறும் அவர்களை ஏத்துதல்
நோயின்(று) எனினும் அடுப்பின் கடைமுடங்கும்
நாயைப் புலியாம் எனல். (பாடல் - 117)

பெற்ற தாயாலேயாயினும் (அன்றித்) தந்தையாலேயாயினும் மிகுத்துக் கூறப்படுதல் இல்லாது தாமே தம் வாயால் உயர்த்திக் கூறிக்கொள்பவர்களை, பிறர் புகழ்ந்து கூறுதல், துன்பம் இல்லையாயினும்  அடுப்பின் பக்கலில் முடங்கியிருக்கும் நாயைப் புலியென்று கூறுதலோ டொக்கும். (க-து.) தற்புகழ்ச்சி உடையாரைப் புகழ்தல் கூடாது. "அடுப்பின் கடைமுடங்கும் நாயைப் புலியாம் எனல்' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com