தற்புகழ்ச்சி வேண்டா!

தருக்குற்று ஒழுகும் பகைவரை வென்றவர்கள் தம்மீது, புகழ்ந்து பிறர் சிறப்பிக்கும் பொருட்டு களிப்புற்ற இடத்தும், தம்மிடத்து உளவாம் வீரஞ் சொல்லாதிருத்தலையே விரும்புக
 தற்புகழ்ச்சி வேண்டா!

பழமொழி நானூறு
 செம்மாந்து செல்லும் செறுநரை அட்டவர்
 தம்மேற் புகழ்பிறர் பாராட்டத் - தம்மேற்றாம்
 வீரஞ்சொல் லாமையே வீழ்க களிப்பினும்
 சோரப் பொதியாத வாறு. (பாடல் -131)
 தருக்குற்று ஒழுகும் பகைவரை வென்றவர்கள் தம்மீது, புகழ்ந்து பிறர் சிறப்பிக்கும் பொருட்டு களிப்புற்ற இடத்தும், தம்மிடத்து உளவாம் வீரஞ் சொல்லாதிருத்தலையே விரும்புக (அது). தன்னிடத்துள்ள குற்றங்களைத் தானே ஒன்று சேர்த்து மிகுத்துக் கூறாதவாறு ஆகும். (க-து.) வீரர்கள் பிறர் பாராட்டும் பொருட்டுத் தம்மைத் தாம் புகழ்தல், தம்முடைய குற்றங்களைத் தாமே கூறுதல் போலாம். "சோரம் பொதியாத வாறு' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com