பழமொழி நானூறு 

புலியொடு மாறுபாடு கொள்ளும் யானையையுடைய அழகிய மலை நாடனே! தம்மின் வலியாரைக் கண்டவிடத்து, வாயாலும் அடக்கமுடையராகி;
பழமொழி நானூறு 


வலிமைக்கு மேலும் வலிமை!

வலியாரைக் கண்டக்கால் வாய்வாளா ராகி 
மெலியாரை மீதூரும் மேன்மை யுடைமை 
புலிகலாங் கொள்யானைப் பூங்குன்ற நாட! 
வலியலாந் தாக்கு வலிது.(பாடல் -  157)

புலியொடு மாறுபாடு கொள்ளும் யானையையுடைய அழகிய மலை நாடனே! தம்மின் வலியாரைக் கண்டவிடத்து, வாயாலும் அடக்கமுடையராகி; தம்மின் மெலியாரிடத்து அடர்ந்து மிக்கு ஒழுகும் மேம்பாடுடைமை வலியில்லாத காலத்து வலிமை உண்டாயினவாறு போலும். (க -  து.) அரசன் தனக்கு மிக்க வலியில்லாத காலத்து வலியார்க்கு அஞ்சி மெலியார்மேல் மீதூர்ந்தொழுகுக என்றது இது. 
"வலியலாந் தாக்கு வலிது' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com