அற்புதச் சித்திரக் கவியில் அழகுச் சுழிகுளம்!

"ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரகவி' என கவிகளை வகைப்படுத்துவர். சித்திரத்தின் மூலம் (ஓவியத்தின்) வரைந்து பாடப்படுவது சித்திரக்கவி.
அற்புதச் சித்திரக் கவியில் அழகுச் சுழிகுளம்!

"ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரகவி' என கவிகளை வகைப்படுத்துவர். சித்திரத்தின் மூலம் (ஓவியத்தின்) வரைந்து பாடப்படுவது சித்திரக்கவி.

வ்வகை சித்திரக் கவிகளுள் ஒன்றாகத் திகழ்வது "சுழிகுளம்' என்கிற பிரிவாகும். இத்தகு சுழிகுளம் என்ற சித்திரக்கவி செய்யுளின் எழுத்து எண்ணிச் செய்யப்படுவது.

இதில் இடம்பெறும் செய்யுள் நான்கு அடிகளைக் கொண்டிருத்தல் வேண்டும். ஒவ்வோர் அடியும் எட்டு எழுத்துகளை மட்டும் பெற்றிருத்தல் அவசியம். இவ்வெட்டு எழுத்துகளும் மேலும், கீழும், உள்ளும், புறமுமாக ஒத்தமைய வேண்டும்.

சித்திரக் கவிகளை அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், திருமங்கை ஆழ்வார், நாற்கவிராச நம்பி போன்றோர் யாத்துள்ளனர். சித்திரக் கவியுள் பலவகைச் செய்யுள்கள் அமைந்துள்ளன. அவற்றுள் "சுழிகுளம்' என்ற செய்யுளின் அழகைப் படித்து இன்புறுவோம்.

"சுழிகுளம்' என்ற சித்திரக் கவிக்குப் பரிதிமாற் கலைஞர் தரும் எடுத்துக் காட்டுச் செய்யுள் இது:

"கவிமுதி யார் பா வே
விலையரு மா நற்பா
முயல் வ துறுநர்
திருவழிந்து மாயா'
இச்செய்யுளின் பொருள் வருமாறு:

கவிமுதியார் பாவே - செய்யுள் இயற்றுவதில் முதிர்ச்சி பெற்றவர் பாடல்களே!; விலை அருமை மா நன்மை பா - விலை மதித்தற்கு அரிய பெருமை வாய்ந்த நல்ல பாடல்களாகும்; முயல்வது உறுநர் - முயற்சி செய்வதில் நன்கு பொருந்தினவர் தம் ; திரு அழிந்து மாயா - செல்வம் சிதைந்து தொலையா.

"சுழிகுளம்' என்ற சித்திரக் கவிக்கு மாறனலங்காரம் தரும் இலக்கணம் வருமாறு:

"தெழித்தெழு நீர்குளத்
தினுட்செறிந்ததைக் கொடு
சுழிந்தடங் குவபோன்
றடங்குதல் சுழிகுளம்'


"ஆரவாரித்து எழும் புனல் குளத்தினுள் தன் இடத்தை அடைந்தது யாதொன்று, அதனைக் கைக்கொண்டு சுற்றி உள்ளே அடங்குவது போல, சுற்றிப் பாவினகத்துப் பொருளைக் கொண்டு அடங்குதல் சுழிகுளமாகும்' என்பது இந்நூற்பாவின் பொருள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com