பழமொழி நானூறு: பழமொழி நானூறு

ஒன்றைச் செய்ய வேண்டும் என மனம் விரும்பியது என்பதற்காக,  பொருந்தாத ஒன்றை அறிவுடையோர் செய்யமாட்டார்.
பழமொழி நானூறு: பழமொழி நானூறு

மனங்கொண்டக் கண்ணும் மருவில் செய்யார்
கனங்கொண்டு உரைத்தவை காக்கவே வேண்டும்
சனங்கள் உவப்பன செய்யாவும் செய்க
இனங்கழு வேற்றினார் இல்.   (பாடல்-230)


ஒன்றைச் செய்ய வேண்டும் என மனம் விரும்பியது என்பதற்காக,  பொருந்தாத ஒன்றை அறிவுடையோர் செய்யமாட்டார். சான்றோர் சொன்ன அறிவுரைகளை உள்ளத்திலே பெரிதாகக் கொண்டு பேணிக் காத்து வருதல் வேண்டும். மக்கள் விரும்பும் செயல்கள் செய்யக்கூடாதனவாகவே இருந்தாலும் செய்தலே வேண்டும். செய்யக்கூடாதவற்றை விரும்பியதற்காக மக்கள் இனத்தையே கழுவேற்றியவர் எவரும் இல்லை. "இனங்கழு வேற்றினார் இல்' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com